நம் வீட்டில் நடக்கும் அன்றாட பூஜையில், சுவாமி படங்களுக்கும், சிலைகளுக்கும்
காலையில் பூச்சூட வேண்டும். சிதம்பரம் நடராஜருக்கு அன்றாட பூஜை செய்ய , அதிகாலையில்
பூப்பறிக்க செல்வார் வியாக்ரபாத முனிவர். காலை 4 மணி இருளில் மரத்திலிருந்து அழுகிய
பூக்களையும், தெரியாமல் பறித்து விடுவார். இவற்றை நடராஜருக்கு சூட்டிய பிறகு தான்,
இத்தகைய
பழுதடைந்த பூக்கள் இருப்பது தெரிய வரும். எனவே, தனக்கு புலிக்காலும், அந்தக் காலிலேயே ஒரு கண்ணும் இருக்க வேண்டுமெனக் கேட்டு நடராஜரிடம் பிரார்த்தனை செய்தார். அவ்வாறு இருந்தால், மரத்தில் பற்றி ஏறி நல்ல பூக்களைத் தேர்ந்தெடுத்து பறித்து விடலாம் என்று எண்ணினார். நடராஜரும் அவருக்கு புலிக்கால் வழங்கினார். இதிலிருந்து காலை நேரத்தில், பூச்சூடி பூஜை செய்வதே உத்தமம் என்பது தெரிய வருகிறது. அவரவர் பணி காரணமாக, மாலையில் விளக்கேற்றும் வேளையில் பூச்சூடுவோரும் உண்டு. எப்போது சூடினாலும், மறுநாள் காலையில் அவற்றைக் களைந்து விட வேண்டும் என்பதே விதிமுறை. காலையிலும், மாலையிலும் பூச்சூடி வழிபடுவோர் மட்டும், மாலையில் களைந்து விட்டு புதிய பூக்களைச் சூடலாம்

No comments:
Post a Comment