சிவாச்சாரியார்களின் தோற்றம்...!
சிவபூசை செய்வது உயிருக்கு நன்மை தருவதாகும். அது இகவாழ்விற்கும் பர வாழ்விற்கும் மேன்மையை அளிக்கிறது. அதனால் எல்லோரும் முறையாகச் சிவ தீக்ஷை பெற்று சிவ பூசை செய்ய வேண்டும். அது ஆத்மார்த்த பூஜை எனப்படும். { ஆத்மார்த்தம் – ஆன்மாவின் நலன் பொருட்டு }
அதுபோல் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் நலமும் வளமும் பெறச் சிவாலயங்களை அமைத்துச் சிவபூசை செய்யப்படுகிறது. ஆலயங்களில் செய்யப்...படும் பூஜை பரார்த்த பூஜை எனப்படும். முறையாக செய்யும் சிவாலய பூஜையின் பயன் அனைத்து உயிர்களையும் சென்றடைகிறது.
{ஆனமார்த்த பூஜை செய்யாமல் பரார்த்த பூஜை செய்யலாகாது என்பது ஆகம விதி.}
எனவே சிவாலய பூஜையை ஆகம நூல்களில் விதித்துள்ளபடி முறையாகச் செய்ய வேண்டும். சிவபெருமான் ஆகமங்களின்படி பூசிப்பதற்காக ஐந்து முகங்களில் இருந்தும் ஐந்து ரிஷ்களை உண்டாக்கினார். { இவர்களை ஊர்த்துவ முகத்திலிருந்து தோற்றுவித்தார் என்று சிவமகா புராணம் கூறுகிறது. } இவர்களில் அகஸ்த்தியர்,கௌசிகர், காஸ்யபர், பாரத்வாஜர், கௌதமர் என்பவர்களாவர். இவர்களுக்கு பெருமான் முறையே தனது ஐந்து முகங்களால் தீக்ஷை அளித்தார்.
சிவபெருமான் அவர்களுக்கு தீக்ஷை அளித்து ஆகமத்தை உபதேசித்து சிவாலய பூசைகளைச் செய்யும் அதிகாரத்தையும் வழங்கினான். அவர்கள் வம்சம் பல்கிப் பெருகிவளர, மனைவியரையும் படைத்தளித்தான், மேற்குறித்த அந்த ஐந்து ரிஷிகளின் பெயரால் சிவாச்சார்யார்கள் ஐந்து கோத்திரத்தார்களாக இருந்து வருகின்றனர். இவர்களிடமிருந்து சில உப கோத்திரங்களும் தோன்றியுள்ளன. இவர்களைக் குருக்கள் என்றும் சிவாச்சாரிய தீக்ஷை மேற்கொண்ட பின் சிவாச்சாரியார்கள் என்றும் அழைக்கின்றோம்.
காமிகாமம் இவர்களுக்குப் பெருமான் சிவ தீக்ஷையால் அருள்புரிவதற்கும், ப்ரதிஷ்டை, உற்சவம், ஸ்நபனம், ப்ரோக்ஷணம், பிராயச்சித்தம், அபிஷேகம் முதலான சடங்குகளைச் செய்துப் வைப்பதற்கும் அதிகாரம் வழங்கினார் என்று கூறுகிறது சிவமஹாபுராணம். இவர்கள் அன்பர்களுக்கு சிவ தருமங்களை விவரித்துக் கூறி சைவத்தை மேன்மைப்படுத்துகின்றனர்.
இவர்கள் தமது கோத்திரத்திற்கேற்ப பல்வேறு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

No comments:
Post a Comment