கிருஷ்ணர், தனது அவதாரத்தை முடித்து வைகுண்டம் திரும்பத் தயாரானார். அவரது
உதவியாளரான உத்தவர், "" கிருஷ்ணா! உங்களைப் பிரிந்து இனி என்னால் வாழ முடியாது.
எனக்கு நல்வழி காட்டுங்கள்,'' என வேண்டினார். இதைக் கேட்ட கிருஷ்ணருக்கு இரக்கம்
ஏற்பட்டது. குரு÷க்ஷத்ரத்தில் அர்ஜூனனுக்கு பகவத்கீதை உபதேசித்தது போல,
உத்தவருக்கும் உபதேசம் செய்ய முடிவெடுத்தார். உத்தவருக்கு உபதேசித்ததால் இது "உத்தவ
கீதை' எனப்பட்டது. பாகவதத்தில் பதினோராம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. பக்தி
நெறியில் மனதை செலுத்தி, பிறவா நிலையை அடையும் வழிமுறை இதில் கூறப்பட்டுள்ளது.
உத்தவரது கேள்விகளுக்கு கிருஷ்ணர் பதிலளிப்பது போல உரையாடல் முறையில் இந்த கீதை
அமைந்துள்ளது.
No comments:
Post a Comment