காசியில் வசித்த அந்தணர் பசியால் அவதிப்பட்டார். அவரை ஈடேற்ற திருவுள்ளம் கொண்ட
பெருமாள், ஒரு பவுர்ணமியன்று, அவர் முன் முதியவர் வடிவில் தோன்றினார். அந்தணரே!
பசியால் சிரமப்படுகிறீர் போல் இருக்கிறீரே!'' என்றார்.
"ஆம்' என்ற அந்தணர், தனது ஏழ்மை நிலைக்கு விடிவு காலம் பிறக்குமா எனக் கேட்டார்.
""அந்தணரே! ஸ்ரீமன் நாராயணன், தன் பக்தர்களுக்கு,"சத்யநாராயணன்' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். நீங்கள் எளிய முறையில் இந்த விரதத்தை மேற்கொண்டாலே பசி தீர உணவு கிடைக்கும்,'' என்றார்.
அந்தணரும் வீட்டுக்குச் சென்று தன் குடும்பத்தாருடன் அன்றைய தினமே விரதத்தைத் துவக்கினார். அப்போது, விரதத்துக்கு தேவையான பொருட்களை யாரோ ஒருவர் அவர் வீட்டில் கொடுத்துச் சென்றார். காலப்போக்கில் அவரது வறுமை விலகியது
மட்டுமல்ல! செல்வந்தராகவும் ஆனார். தொடர்ந்து இந்த விரதத்தை அனுஷ்டித்து, அந்த குடும்பத்தினர் அழியாச்செல்வமான மோட்ச சாம்ராஜ்யமும் பெற்றனர்.

No comments:
Post a Comment