இந்த உலகில் உள்ள தாவர ஜங்கமங்களில் சிரத்தின் தொடக்கத்திலேயே விஷத்தை உடைய ஒரே உயிரினம் சர்ப்பம்தான். மனிதர்களிள் மனதில் இது மூட்டும் அச்சமும் கொஞ்ச நஞ்சமல்ல. காலும் கையுமின்றி ஒரு நீண்ட கோடு போல உள்ள ஒரு உருவம் வளைந்தும் நெளிந்தும் செல்வதே கூட ஆச்சரியமும் அதிர்வும் தரும் ஒரு அனுபவமாகும். இந்த உருவம் மனித மனங்களுக்குள் மூட்டும் அச்சத்திற்கு ஒரு அளவே இல்லை.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்கிற ஒரு ...பழமொழியையே உருவாக்கிவிட்ட இந்த சர்ப்பங்கள் சிவபெருமானின் திருமேனியில் ஆபரணமாகத் திகழ்வதை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதன் பின்புலத்தில் ஒரு புராண வரலாறும் உண்டு. காஸ்யப மகரிஷியின் மனைவியரில் இருவர் கத்துரு, விநதை இவர்களுக்கு நடுவில் ஒரு சமயம் கருத்து வேற்றுமையால் சண்டை ஏற்பட்டது. இதில் கத்துருவின் கரம் ஓங்கிட விநதை சிறையில் அடைக்கப்பட்டாள்.
விந்தையின் மகனே கருடன், கருடன் மிகச் சிறந்த சிவ பக்தன். தாய் சிறையில் அடைக்கப்படவும் அவளை மீட்கும் பொருட்டு தனயனான கருடன் தேவலோகம் சென்று இந்திரனுடன் சண்டையிட்டு அமுத கலசத்தை அவனிடம் இருந்து பறித்துக் கொண்டு சென்றான்.
அதை கத்துருவுக்கு வழங்கி தாயை விடுவிக்கச் செய்ய வேண்டும் என்பது கருடனின் விருப்பம். கத்துரு பெண்ணாக இருப்பினும் அவள், சர்ப்ப வம்சம், நாகலோகத்தைச் சேர்ந்தவள். அவள் அமிர்தத்தை உண்டால் அழியாப் பெருவாழ்வு பெற்று விடுவாள்.
கிரத்தில் விஷத்தை உடைய சர்ப்பங்கள் அழியாப் பெருவாழ்வு பெற்றால் மற்ற உயிரினங்கள் என்னாவது.?
இதை அறிந்த தேவர்கள் காக்கும் கடவுளான திருமாளிடம் முறையிட, திருமாலும் திருவுள்ளம் கொண்டு கருடனைத் தடுத்து விநதையைச் சிறை மீட்க தான் உதவுவதாகக் கூறி அவ்வாறே செய்ய. கருடன் அந்த நொடி முதல் மாலின் அடியவனாக மாறி வாகனமாக மாறினான்.
நாகலோகத்தைச் செர்ந்த கத்துருவோ அடைக்கலம் தேடி சிவபெருமானை அடைந்தாள். அவளையும் அவளது புத்திரர்களையும் ஆட்கொண்ட சிவன். பதிலுக்கு அவளது சர்ப்பங்களையே தனது மேனிக்கான அலங்கார ஆபரணங்களாக ஆக்கிக் கொண்டு அருள்பாலித்தார்.
தலையில் விஷத்தை உடைய சர்ப்பங்கள் கழுத்தில் விஷத்தை உடைய நீலகண்டனின் திருவாபரணங்களாயின. அவற்றை அழிக்கும் குணமுள்ள கருடன் மாலின் வாகனமானான்.
இது வரலாறு. ஆனால் இதன் உட்பொருளே வேறு. உலகில் அழிக்கும் தன்மை படைத்த அனைத்தும் சிவனைத் தஞ்சமடையும் பட்சத்தில் அவனருளால் நம்மை அழிக்காது நமக்கு ஆபரணமாகும் ஆகிவிடக்கூடும். அதாவது நமக்கு பயன்படக் கூடியதாகிவிடும் என்பதே உட்பொருள்!Mehr anzeigen

No comments:
Post a Comment