எல்லாப் பெண்களும் தீர்க்க சுமங்கலியாக போய் சேர்ந்து விட வேண்டும் என்று
ஆசைப்படுகிறார்கள். பூவும் பொட்டுமாய் போய்ச் சேர்வது என்பது என்னவோ பெரிய
பாக்கியம் தான். ஆனால், அதன் பிறகு ஆண்கள் பாடு தான் கஷ்டம். இதுபற்றி சாஸ்திரம்
என்ன சொல்கிறது தெரியுமா?
மனைவிக்குப் பின் பிள்ளைகளையே நம்பியிருக்க வேண்டும். ஒரு தடவை "சரி' என்பார்கள். இன்னொரு தடவை "இல்லை' என்பார்கள். உடல்நிலை ஒத்துழைக்காவிட்டால், இன்னும் கேவலத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். "கிழம் போய் சேரமாட்டேன்' என்கிறதே என மருமகள் திட்டுவாள். இப்படி வாழ்வதை விட போய்ச் சேர்ந்து விடுவதே மேலானது'' என்கிறது.
சரி...வாழ்வின் இறுதியில் இப்படிப்பட்ட நிலை வராமலிருக்க ஏதாவது வழியிருக்கிறதா?
ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. இளமை முதலே யாருக்கும் கேடு நினைக்காமல் வாழ வேண்டும். வாழ்க்கை என்றால் இன்னது தான் என்ற விவேகம் இருக்க வேண்டும். அதாவது, எல்லா <உயிர்களிலும் கடவுள் இருப்பதாக நினைத்து ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, சிவாயநம, ஓம் சக்தி, ஓம் சக்தி விநாயக நமஹ, சரவணபவ என்று அவரவர் இஷ்டதெய்வ மந்திரங்களை சிறு வயதிலிருந்தே பக்திப்பூர்வமாகச் சொல்ல வேண்டும். இது நம்மால் முடியும், எளிய வழி தான்.
ஆனால், ஆணவம் காரணமாக சொல்ல மறுப்போம். இளமை ரத்தம் எகிறிக்குதிக்கும். ஆனால், கால் நடுங்கி கை நடுங்கி காலம் வந்து சேரும் போது, காணாத துன்பமெல்லாம் தானாக வந்து சேர்ந்துவிடும். கவனமாய் இருப்போம்.

No comments:
Post a Comment