Tuesday, February 11, 2014

தானமும் தர்மமும்....


தானமும் தர்மமும்....

ஸ்ரீசைதன்யர் எந்தக் காரியத்துக்கும் பகவானைத் தவிர வேறு யாரையும் சார்ந்திருக்கக் கூடாது என்ற கொள்கையை கடைபிடித்து வந்தவர். ஒரு நாள் தினசரி வழிபாட்டுக்குரிய நைவேத்தியப் பொருட்கள் இல்லை. எனவே, சீடர் ஒருவர் பக்கத்து இல்லத்தில் இருந்த அம்மையார் ஒருவரிடம் அன்றைய வழிபாட்டிற்கு நைவேத்தியப் பொருள்கள் தந்து உதவும் படி கேட்டார். அந்த அம்மையார் கிருஷ்ண பக்தையாதலால் உடனே அரிசி, சர்க்கரை, பால் முதலிய பொருட்களைக் கொடுத்தார். சீடரும் பெற்றுக் கொன்று வந்து அன்றைய வழிபாட்...டை நடத்தினார். வழிபாட்டின் போது வந்த மகாபிரபு, நைவேத்தியப் பொருள் எப்படி கிடைத்தது என்று கேட்டார். சீடர், தாம் அம்மையாரிடம் வாங்கி வந்ததைக் கூறினார்.

உடனே சைதன்யர், "நீ செய்தது தவறு. அந்த அம்மையாரிடம் இருந்த நம்பிக்கை உனக்கு இந்த கண்ணனிடம் இல்லையே! அவனுக்கு நைவேத்தியம் செய்யப் பொருள் இல்லையென்றால் அவனிடமே கேட்டிருக்கலாமே! அதற்காக சந்நியாச தர்மத்தை மீறி ஒரு வீட்டில் போய் ஏன் கேட்க வேண்டும்?" என்றார். சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. "பகவானுக்கு நைவேத்தியம் செய்ய பகவானிடமே கேட்பதா? அப்படிக் கேட்டால் மட்டும் பொருள்கள் தானாக வந்து விடுமா?" என்று பணிவுடன் கேட்டார்.

அதற்கு மகாபிரபு, " நீ பகவானிடம் கேட்டிருந்தால், அந்த அம்மையார் அவராகவே இந்த நைவேத்திய சாமான்களைக் கொண்டு வந்து தந்திருப்பார். தானாகவே மனம் உவந்து கொடுப்பது தானம். அதற்கு பலன் அதிகம். கேட்டுத் தருவது தர்மம். அதற்கு பலன் குறைவு. அம்மையார் தானம் செய்து அடைய வேண்டிய பலனை நீ தர்மம் கேட்டுக் குறைத்து விட்டாய்" என்றார்.

 

No comments:

Post a Comment