Saturday, April 19, 2014

அக்னி நட்சத்திரத்தில் செய்யத்தகுந்தவை-------அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை*

அக்னி நட்சத்திரத்தில் செய்யத்தகுந்தவை*
*உபநயனம்
*கல்யாணம்
*யாகம்...
*சத்திரங்கள் கட்டுதல்

போன்ற சுபகார்யங்கள் செய்யலாம்.
இதில் கல்யாணம் செய்யலாம் என உள்ளது.ஆனால் பல பொதுமக்கள் கல்யாணம் வைக்க பயப்படுகிறார்கள்.இதுபோன்ற சமயங்களில் ஜோதிடர்கள்தான் அவர்களுக்கு புரியவைக்கவேண்டும்.
*அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை*
*செடிகள் வெட்டுவது
*நார் உரிப்பது
*வீடு கட்ட துவங்குவது
*கிரகபிரவேசம் செய்தல்
*விதை விதைத்தல்
*கிணறு வெட்டுதல்
*தேவதா பிரதிஷ்டை
போன்ற விஷயங்கள் கூடாது என சொல்லப்பட்டுள்ளது.
இங்கே தேவதா பிரதிஷ்டை என சொல்லப்பட்டது புதிதாக ஆலயநிர்மாணம் செய்து புதிய விக்ரஹங்களை ப்ரதிஷ்டை செய்வதையே குறிக்கும.
பழைய ஆலயங்களில் செய்யப்படுகின்ற ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகத்திற்கு இந்த விதி பொருந்தாது.எனவே பழைய ஆலயங்கள் சிதிலமடைந்த காரணத்தால் பாலஸ்தாபனம் செய்து ஆலயத்தை புதுப்பித்து செய்யப்படும் ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் செய்யலாம்.என்பது அடியேனின் கருத்து.
நன்றி.
-வெங்கடேச குருக்கள்

No comments:

Post a Comment