நால்வர் - ஈசன் - ஆட்கொள்ளல் :
சம்பந்தர் கொஞ்சியும்,திருநாவுக்கரசர் அஞ்சியும்,
மணிவாசகர் கெஞ்சியும்,சுந்தரர் விஞ்சியும்
பதிகங்கள் பாடியுள்ளனர்....
ஞானசம்பந்தரை பாலைக்காட்டியும்,
திருநாவுக்கரசருக்குசூலை (நோய்) காட்டியும்,
மணிவாசகருக்கு காலைகாட்டியும்,
சுந்தரரை ஓலைகாட்டியும்
ஈசன் தடுத்தாட்கொண்டார்.
நால்வரும் சரியை, கிரியை,யோகம், ஞானம் எனும்
நான்மறைகளின்வழி நின்று பாடி அருள்பெற்றனர்.
சிதம்பரம் தில்லைக்கோயிலுக்கு நான்கு வேதங்களே
நான்கு கோபுரங்களாக அமைந்துள்ளன.
நான்கு கோபுர வழியாகவும் மேற்கண்ட நால்வரும்
வழிவந்து வழிபாடாற்றியுள்ளனர்.
கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்க வாசகரும்,
தெற்கு கோபுரம் வழியாக திருஞானசம்பந்தரும்,
மேற்கு கோபுரம் வழியாக திருநாவுக்கரசரும்,
வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும் வந்து
முக்தி பேறுபெற்றனர்.
திருஞான சம்பந்தர் :
ஞானப்பால் குடித்த குழந்தை.குழந்தையே தெய்வத்தைக்
கொஞ்சும் விதத்தில் பாடல்களைப் பாடியுள்ளவர்.
குழந்தை நம்மைத்தேடி வரும்போது,நாமே அந்தக்
குழந்தையை நோக்கிச்சென்று கொஞ்சவிழைவது போல,
தாமே முன்னோக்கிச்சென்று தெற்கு நோக்கி
குழந்தையை வரவேற்பது போல,தெற்கு கோபுரம் வழியாக
வரச் செய்து அருள்பாலித்தார்.
திருநாவுக்கரசர் : மிகவும்பணிவானர். உழவாரப்
பணி செய்தவர். ஈசனின் அருள் பெற மிகவும் கெஞ்சிப்
பாடியவர். திருநீறு பூசியபின் சூலை எனும் வயிற்று வலி நோய்
தீர்ந்து சிவனை நெக்குருகப் பாடியவர். அவருக்காக,
அருள்தரும் அபய ஹஸ்தத்தினால் (நடராஜரின்
வலக்கை மேற்கு நோக்கி நீண்டிருக்கும்)
அருள, அப்பர் சுவாமிகளை மேற்கு கோபுர வாயில்
வழியாக வரச்செய்து அருள்பாலித்தார்.
சுந்தரர் - வன் தொண்டர்.ஓலையைக் காட்டி சுந்தரன் தன்
அடிமை என திருவிளையாடல் செய்து,சுந்தரரை ஈசன்
ஆட்கொண்டருளினார்.ஈசனை ஒரு நண்பன் போல
நினைத்தவர். விஞ்சிப்பாடியவர். பரமேசனையே தன்
காதலிக்காக தூது போகச்சொல்லியவர். ஒரு நண்பனானவர்
எப்படி தன் நண்பரின் பின்பக்கத்திலிருந்து வந்து தோள்
மேல்கை போட்டு நட்பு கொண்டாடுவாரோ
அதே போல, சுந்தரர் நடராஜப்பெருமானை (நடராஜரின் பின்
பக்கமாகிய வடக்கு)வந்தடைந்தார். சுந்தரரை
வடக்கு கோபுர வாயில்வழியாக வரச்செய்து அருள்பாலித்தார்.
மாணிக்கவாசகர் - இறைவனாலேயே மாணிக்கவாசகர்
என போற்றப்பட்டவர்.திருப்பெருந்துறையில் கல்லால
மரத்தடியின் கீழ்யோகநிலையில் அமர்ந்திருந்த
குரு வின் இடது புறத் திருவடியின் திருவொளி
கண்டு ஞான மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தவர். ஆகையால்,
அவரை (நடராஜப் பெருமானின் இடது புறமாகிய)
கிழக்கு கோபுரம் வழியாகவரச்செய்து அவருக்கு அருள்பாலித்தார்.
நாமும் நால்வர்கள் காட்டிய ந(நா)ல்வழியே சென்று, அவர்கள்
காட்டிய அறநெறியைப்பின்பற்றி, முக்தி இன்பம் பெறுவோம்

No comments:
Post a Comment