Thursday, April 17, 2014

தவறான ஒப்பீடு.

தவறான ஒப்பீடு.
------------------------
ஞானியிடம் ஒருவர் சென்று..,
''நான் ஏன் உங்களைப்போல இல்லை..? உங்களைப்போல என்னால் ஏன் அமைதியாய் இருக்க முடியவில்லை..? உங்களுக்கு இருக்கும் அறிவு எனக்கு ஏன் இல்லை..?'' என்று கேட்டார்.
...
ஞானி சொன்னார்,
''வெளியில் வா.. இந்த அமைதியான தோட்டத்தில் முழு நிலவின் அழகினைப் பார். இந்த நிலவொளியில் இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் எவ்வளவு அழகாய் இருக்கின்றன?''
அவர் பொறுமை இழந்து
"எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள்..?" என்று கேட்டார். ஞானி சொன்னார்..,
''இதோ இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் வெகு நாட்களாக என் தோட்டத்தில் இருக்கின்றன.., ஆனால் ஒரு நாளும். இந்த செடி தான் ஏன் இந்த பெரிய மரம் போல இல்லை என்று மரத்திடம் கேட்டதில்லை.அதேபோல மரமும் அந்த செடியிடம் தான் ஏன் செடிபோல இல்லை என்று கேட்டதில்லை.மரம்,மரம்தான். செடி,செடிதான்.. மரம் தான் மரமாயிருப்பதிலும், செடி,தான் செடியாயிருப்பதிலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கின்றன.''
ஒரு மரத்தில் லட்சகணக்கான இலைகள் இருந்தாலும் ஒன்றைப்போல் இன்னொன்று இல்லை. அதுபோல் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே. அதுதான் இயற்கையின் படைப்பு. தவறான ஒப்பீடுதான் மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம்

No comments:

Post a Comment