பற்றுதலை விட வேண்டும்
விருப்பத்தைப் போலவே வெறுப்பும் மனிதனுக்குப் பெரும் பகையே. இதன் காரணமாக மனிதன் கோபத்திற்கு ஆளாகிக் கடமைகளை மறந்து விபரீதமாக நடக்கத் தொடங்குகிறான். அதனால் அவனுக்கு பேரழிவு ஏற்பட்டு விடுகிறது. மனிதர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
வெறுப்பின் மூல காரணம் உண்மையில் விருப்பம் அல்லது தன்னலப் பற்றே. இந்த விருப்பம் அல்லது பற்றுதல் காரணமாக காமம், கோபம், பேராசை, மயக்கம் முதலிய பயங்கரமான விரோதிகளின் கூட்டமே முளைத்தெழுந்து நன்னடத்தையிலிருந்து மனிதனை வழுவச் செய்து அவன...ுடைய புத்தியை தடுமாறச் செய்கிறது. அதனால் மனிதனுடைய பரம லட்சணமான முக்தியை அடைய முடியாமல், இழிந்த நிலையை அடைகிறான். ஆகவே எல்லாவற்றிற்கும் மூல காரணமான பற்றுதலை விட்டுவிட மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

பற்றற்ற மனிதனின் ஒவ்வொரு செயலும் தன்னலமற்றதாக இருக்கிறது. இதனால் அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அன்பும், அருளும் மலர்கின்றன. எப்பொருளிலும் அவனுக்கு ஆசையில்லாமையால் உலகில் அனுபவிக்கத்தக்க எத்தனை பொருட்கள் உள்ளனவோ, அவை எல்லாம் அவன் வசத்தில் வருகின்றன. அவற்றை அவன் பெருந்தன்மையோடு இடம், பொருள், ஏவலறிந்து உலக நன்மைக்காக நல்ல முறையில் செலவு செய்ய முயல்கிறான்.
இத்தகைய நல்லவர்களுடைய எல்லாச் செயல்களையும் மூடர்களோ, அறிவிலிகளோ புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள், தாம் செய்யும் அறிவற்ற செயல்களோடு இதை ஒப்பிட்டு இதில் குற்றத்தைத்தான் காண்பார்கள். ஆனால் இத்தகைய மகாத்மாக்களின் தன்னலமற்ற செயல்களில் சிறிதளவுகூட குற்றம் புக முடியாது. நல்லோர் மனதில் இகத்திலோ பரத்திலோ சுகம் வேண்டுமென்ற ஆசையும் இல்லாததால், அறிவிலிகளின் கண்ணோட்டத்தில் குற்றமாகத் தோன்றினாலும், அக்காரியங்கள் குற்றமிலாப் புனிதச் செயல்களாகவே விளங்கும்.
கௌரவம், புகழ், பெருமை, உலகில் உள்ள எந்த நிலையும் பெறும் பேராசை இல்லாததால், உலக வாழ்வின் எந்த உயர்நிலையும், உலகிலுள்ள எந்தப் பொருளும், இந்தப் பெரியோர்களைக் கவர்ந்து இழுக்க முடியாது. எப்பொழுதும் அச்சமற்ற நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எவருக்கும் பயப்பட மாட்டார்கள். எவரிடமும் கடுமையாக நடக்க மாட்டார்கள்.
பணிவு, மென்மை, சத்யம், அமைதி ஆகியவற்றின் கண்கூடான உருவமாகத் திகழ்வார்கள். பொறுமை அவர்களிடம் இயல்பாக அமைந்துவிடுகிறது. ஆகவே, கோபம் என்பது எள்ளளவும் தலைகாட்டாது. சில சமயம் கோபப்படுவது போல் தோன்றினாலும் உண்மையில் அவர்களிடம் கோபமே கிடையாது. எங்கும் எவரிடமும் சமபுத்தி பெற்றார்களானதால் தகாத நிந்தையோ, புகழ்ச்சியோ அவர்கள் செய்ய மாட்டார்கள். பொய், கபடம் முதலிய குறைகள் அவர்களிடம் இருக்கவே முடியாது.
ஏதாவது ஒரு விஷயம் வெளிப்பட்டால், பிறருக்குத் தீங்கோ, தனக்குப் புகழோ ஏற்படும் என்றாலும் அதை அவர்கள் வெளியிட மாட்டார்கள். இதனால் கபடம், பொய் அல்லது திருட்டு அவர்களிடம் இருப்பதாக எண்ணக் கூடாது

No comments:
Post a Comment