Monday, April 21, 2014

கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?

கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
பூதனை எனும் அரக்கி தன்னை ஒரு அழகான பெண்ணாக மாற்றிக் கொண்டு, தனது மார்பகங்களில் விஷத்தைத் தடவிக் குழந்தையாக இருந்த கிருஷ்ணர்க்குப் பால் கொடுக்கவந்தாள்.
கிருஷ்ணர் அவள் பாலைக் குடித்துக் கொண்டே, அவளது உயிரையும் குடித்தார்.
...
பாலைக் குடிக்கும் நேரத்தில் அவர் கண்களை மூடிக் கொண்டி ருந்தார் என்றும் அதற்குப் பலரும் பல விளக்கங்களைக் கூறுகிறார்கள். அவர்கள் சொல்லும் விளக்கங்களைக் காண்போம்.
1. அவள் மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு, வெளியில் நல்லவள் போல வேடம் போட்டாள். இதனால் கிருஷ்ணர் அவளைப் பார்க்க விரும்பவில்லை.
2. கிருஷ்ணர் கண்களைத் திறந்து கொண்டு இருந்தால் தம்முடைய கருணைப் பார்வை அவள் மீது பட்டிருக்கும். அவளைக் கொன்றிருக்க முடியாது.
3. கிருஷ்ணர், “பாலை நான் சாப்பிடுகிறேன். அதிலிருக்கும் விஷத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சிவ பெருமானை வேண்டுவதற்காகக் கண்ணை மூடினார்.
4. இராமாவதாரத்தின் போது முதன் முதலாக ஒரு பெண்ணைக் கொன்றோம். இந்த அவதாரத்திலும் முதன் முதலாக ஒரு பெண்ணா என்று வெட்கப்பட்டுக் கொண்டு கண்ணைமூடினார்.
இப்படி எத்தனையோ விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
தீயவற்றைப் பார்க்காதிருப்பது சிறந்த முறைதானே..?

No comments:

Post a Comment