காயமே இது பொய்யடா
பொம்மலாட்டம் தெரியும்தானே...! மறைவாய் திரைக்கு பின்னால் இருக்கும் ஒருவர் இயக்க, பாவைகள் மேடையில் ஆடுவதைப் போன்றதே மனித வாழ்க்கை. ஆட்டுவிப்பவன் நிறுத்தினால் ஆட்டம் நின்று போய்விடும் என நிலையற்ற மனித வாழ்க்கையினை பின்வரும் ...பாடலால் விளக்குகிறார் பாம்பாட்டிச்சித்தர்...
"மரப்பாவை போலொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனெனும் சூத்திரம் மாட்டி
திறக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே
தேகம் விழுமென்று தெளிந்தாடு பாம்பே"
- பாம்பாட்டிச்சித்தர் -
மேலும் மனித உடலானது நிலையில்லாதது அழிந்துவிடும் என்பதை,
"சீயும் மலமும் செந் நீரும் நிணமும்
சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது
உடைந்தால் நாயும் நரியும் பேயும் கழுகும்
நமதென்று தின்னும் மென்றாடாய் பாம்பே"
- பாம்பாட்டிச்சித்தர் -
சீரும், சிறப்பாய் போற்றி வளர்க்கும் இந்த உடல் சீவன் தங்கி இருக்கும் வரை. உலகில் தான் பார்க்கின்ற பொருட்கள் எல்லாம் தனக்கு சொந்தமானது என்று நினைக்கும்.
ஆனல் சீழும், குருதியும், நிணமும், மலமும் சேர்ந்த நாற்றக் குடமான உடலில் இருந்து சீவன் பிரிந்து விட்டால் நாயும் , நரியும், பேயும், கழுகும் தமக்கு சொந்தமானது என அந்த உடல் என்று பங்கு போட்டு சாப்பிட தொடங்கிவிடும்,
இப்போது கூறுங்கள்..., இந்த உடல் உங்களுக்கு சொந்தமானதா? இல்லை நாய்களுக்கும், நரிகளுக்கும் சொந்தமானதா? என்று முகத்தில் அடித்தார் போல கேட்கிறார் பாம்பாட்டி சித்தர்... Mehr anzeigen

No comments:
Post a Comment