பெரியாழ்வாருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் விஷ்ணு சித்தர். பாண்டிய அரச சபையில் திருமாலின் மேன்மையை இவர் நிரூபித்தார். அதற்குப் பரிசாக விஷ்ணுசித்தர் பொற்கிழியை வென்றபோது, பாண்டிய அரசன் வல்லபதேவன் அவரை பட்டர்பிரான் என கொண்டாடினான். பட்டத்து யான...ைமீது அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றான். அப்போது தமது பக்தனின் பெருமையை நேரில் காண கருடன்மீது எழுந்தருளினார் திருமால்.பெருமாளின் திவ்ய வடிவைக் கண்ட ஆழ்வார், தம்மை மறந்த நிலையில் பெருமாளுக்கு திருஷ்டிபடுமோ என அஞ்சினார். உடனே பட்டத்து யானைமேல் இருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு எம்பெருமானுக்கு எத்தகைய ஊறும் ஏற்படாதிருக்க திருப்பல்லாண்டு பாடினார்.
அதன் காரணமாகவே பெரியாழ்வார் என அனைவராலும் கொண்டாடப்படும் பேற்றைப் பெற்றார் அவர்.
பெரியாழ்வார் கண்ணன் பக்தியில் திளைத்தவர். கண்ணனின் வடிவழகையும் பல்வேறு விளையாடல்களையும் நினைத்து நினைத்து உருகி நிறைபவர். யசோதாவாகவே தம்மை நினைத்துக் கொண்டு, அந்த மாயக்கண்ணனை தாலாட்டி, சீராட்டி மகிழ்ந்தவர். அவர் தன்னுடைய அனுபவங்களை தேனினும் இனிய செந்தமிழ்ப் பாசுரங்களாக வடித்தார்.
அத்தகைய உயர்ந்த கிருஷ்ண பக்தி இருந்ததனால்தான், பாற்கடலில் ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருந்த பரமாத்மா ஓடிவந்து ஆழ்வாரின் மனக்கடலில் வாழப் புகுந்தான். "பனிக்கடலில் பள்ளிகோளை பழகவிட்டு, ஓடி வந்தென் மனக்கடலில் வாழவல்ல மாய மணாள நம்பி' என்று ஆழ்வார் பூரித்துப்போய் பாடுகிறார். வைகுந்தம், துவாரகை போன்ற இடங்களை விட்டுவிட்டு பெரியாழ்வாரின் இருப்பிடத்தை நாடி வந்தானன்றோ அவன்.
ஆழ்வார் தமது இறைத் தேடல் அனுபவத்தை வெகுசிறப்பாகக் கூறுகிறார். "காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழலில்லை; நீரும் இல்லை; பரந்தாமா, உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்' என்கிறார் ஆழ்வார்.
"தேவையற்ற முயற்சிகளிலும் கவலைகளிலும் அழுந்திக் கிடந்த என்னை உன்னுடைய பேரருளால் அஞ்சேல் என அபயம் அளித்துக் காப்பாற்றினாய். அருளே வடிவான உன்னைக் காணும்போது காலும் எழா, கண்ண நீரும் நில்லா, குரல் மேலும் எழா' என்று உளம் நெகிழ்ந்து பாடுகிறார். "பரந்தாமனுக்குக் தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்தாலே போதும்' என்கிறார்.
"ஓம் நமோ நாராயணா என்ற திருமந்திரத்தை ஓதாமல் இருக்க நேரிடுமாயின் அந்த நாளே தமக்குப் பட்டினி நாள்' என்கிறார் பெரியாழ்வார். அன்றாடம் இறைவனை நினைக்கவேண்டும்; அவனைத் தொழ வேண்டும்; அவன் நாமங்களைப் பாட வேண்டும் என்பதே அவர் விருப்பம்.
"ஏழுலகும் உண்ட தூமணி வண்ணனை நினைக்காத வலிய நெஞ்சுடையவர்கள் பூமிக்கு பாரமே' என மொழிகிறார் ஆழ்வார்.
பக்தர்களின் பெருமைகளையும் போற்றுகிறார் பெரியாழ்வார். "நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள்; உழக்கிய பாதத்தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே' என்கிறார்.
"பரந்தாமனின் அருளைப் பெற ஆயுள் முடியும் காலம் வரை காத்திருக்காதீர்கள். மூப்பு எய்தும்போது நம்முடைய மனம், வாக்கு, உடல் எல்லாம் நலிந்த நிலையில் இருக்கும்.
அப்போது ஆண்டவனை நினைப்பது அரிது. ஆகவே திடமாக இருக்கும்போதே பக்தி செய்துவிடுங்கள்' என்று போதிக்கிறார். அவர் சொன்ன வழியில் நின்று இப்போதிலிருந்தே பக்தி செய்வோம்; பரமபதம் பெறுவோம்

No comments:
Post a Comment