இல்வலன்
காஸ்யபமுனிவருக்கும் சுரசை என்ற அசுர குமாரிக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்கமுகன், தாருகன், இவர்களுடைய சகோதரியாகத் தோன்றியவள் அஜமுகி. அஜமுகி கொடிய அரக்கியாக இருந்தாள். முனிவர்களின் தவத்தைக் கலைப்பது அவளுக்கு விளையாட்டாக இருந்தது....
அஜமுகி மணப்பருவத்தை அடைந்தபோது, துர்வாச முனிவரைப் பற்றிக் கேள்விப்பட்டாள். ருத்ர அம்சமாகப் பிறந்த துர்வாசரின் தவத்தைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவருடைய ஆசிரமத்தைத் தேடிச் சென்றாள். ஆட்டின் முகம் பெற்றிருந்ததால் அஜமுகி என்ற பெயரைப் பெற்ற அந்த அரக்கி துர்வாச முனிவரின் முன் நின்று பலவிதமான இடையூறுகளைச் செய்தாள். அதனால் மகரிஷியின் தவம் கலைந்தது.
“யாரம்மா? இந்த வனத்தில் தனியாக வந்திருப்பதன் காரணம் என்ன?” என்று துர்வாசர் அஜமுகியைக் கேட்டார். “தங்களை மணந்து புதல்வர்களைப் பெற வேண்டும்” என்று அவள் பதிலுரைத்தாள். அஜமுகி சூரபத்மனின் சகோதரி என்பதை மகரிஷி அறிந்திருந்ததால், அஜமுகியின் விருப்பத்துக்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் அஜமுகியோ அவரைப் பலவிதமான தொல்லைகளுக்கு ஆளாக்கினாள். முடிவில் மகரிஷி அஜமுகியின் விருப்பத்துக்கு இணங்கினார்.
அவர்களுக்கு வாதாபி, இல்வலன் என்ற இரு பிள்ளைகள் தோன்றினார்கள். வாதாபி தன் தாயைப் போல ஆட்டு முகத்துடனும் இல்வலன் துர்வாசரைப் போலவும் இருந்தார்கள். பிள்ளைகள் தந்தையின் தவத்தையெல்லாம் தங்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று கேட்க, துர்வாசர் கோபம் கொண்டு, “அகத்திய முனிவரால் இறப்பீர்களாக” என்று சாபமிட்டார்.
சகோதரர்கள் இருவரும் பிள்ளைப் பிராயம் முதலே முனிவர்களைத் துன்புறுத்தி அதில் மகிழ்ந்து வந்தார்கள். முனிவர்களின் உயிரைப் பறிப்பதற்காக வரம் வேண்டி பிரம்மாவைக் குறித்து தவம் செய்தார்கள். பிறகு வேள்வி ஒன்றையும் செய்தும் பிரம்மா தோன்றாததால் இல்வலன் கோபம் கொண்டான். தம்பியான வாதாபியை வெட்டி வேள்வித்தீக்கு இரையாக்கினான்.
இதைக்கண்டு பிரம்மா இல்வலன் முன்பு தோன்றினார். “நீ வேண்டும் வரம் என்ன?” என்று வினவினார்.
“என் தம்பியை வெட்டி வேள்வித் தீயில் இட்டுவிட்டேன். அவன் திரும்பி உயிருடன் வரவேண்டும்.” என்றான் இல்வலன். பிரம்மாவும் “வாதாபி எழுந்து வா” என்றதும் வாதாபி முன்புபோல எழுந்து வந்தான். இதைக் கண்ட இல்வலன், பிரம்மாவிடம், “இதே போல் வாதாபி எப்போது இறந்து போனாலும் நான் அழைத்த மாத்திரத்தில் எழுந்து வரவேண்டும்.” என்று கேட்டுக் கொண்டதும் பிரம்மா அந்த வரத்தையும் இல்வலனுக்கு அளித்தார்.
அதுமுதல், இல்வலனும் வாதாபியும் முனிவர்களைக் கண்டால் பணிந்து வணங்கி, தங்கள் இல்லத்திற்கு பிக்ஷை ஏற்க வருமாறு அழைப்பார்கள். இல்வலன், வாதாபியை வெட்டி, சமையலில் சேர்த்து, முனிவரை உண்ணச் செய்வான். அவர் உண்டு முடிந்ததும் “வாதாபி வெளியில் வா” என்றதும் முனிவரின் வயிற்றுக்குள் உணவாகச் சென்ற வாதாபி முழு உருவாக வெளியே வரும்பொது முனிவரின் வயிறு வெடித்து அவர் இறந்து விடுவார்.
இவ்வாறு செய்து வந்த இல்வலனும் வாதாபியும் குடகு நாட்டுக்கு வந்த அகத்திய முனிவரை வரவேற்று தம் இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தார்கள். வழக்கம் போல வாதாபியை வெட்டிச் சமைத்து முனிவருக்குப் படைத்தான். அரக்கர்களது சூழ்ச்சியை நன்கு அறிந்த அகத்தியர், “வாதாபி ஜீர்ணோபவ” என்று கூறினார். இதை அறியாத இல்வலன் வாதாபி எழுந்து வா” என்று பலமுறை கூறியும் வராதது கண்டதும் முனிவரைக் கொல்லத் துணிந்தான். அகத்திய முனிவர் தம் கரத்தில் இருந்த தர்ப்பைப் புல்லை அவன் மீது வீசி சிவபெருமானைத் தோத்தரித்ததும் இல்வலனும் மாண்டு போனான். Mehr anzeigen

No comments:
Post a Comment