Tuesday, May 13, 2014

எங்கே சூத்திரன்?

எங்கே சூத்திரன்?

நான்கு வருணபேதம் பற்றி தமிழ்நாட்டில் வெகுவிசாலமாக பேசபடுகிறது. ஆனால் அவை அத்தனையும் பேரும் புகழும் பெற்ற பெரிய மனிதர்களால் சொல்லப்படும் சுத்தப்பொய்கள்.

தொல்காப்பியம் மரபியல்:...

''நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய'' (தொடர் எண்- 1570)

முப்புரிநூல், கமண்டலம், முக்கோல் எனக்கூடிய தவம் செய்யும் கைதாங்கி, அமரும் பலகை இவை நான்கும் அந்தணர்க்குரியவைகள். (வனத்திற்கு சென்று தவம் செய்யும் வனப்பிரஸ்தன்)

''அந்தணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.'' (தொடர் எண்- 1572)

அந்தணர்க்குரிய முப்புரி நூல், கமண்டலம், முக்கோல், பலகை அரசர்க்கும் பொருந்தும். (அரசனும் தவம் செய்ய தகுதியானவன்)

''படையும் கொடியும் குடையும் முரசும்/
நடைநவில் புரவியும் களிறும் தேரும்/
தாரும் முடியும் நேர்வன பிறவும்/
தெளிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய.'' (தொடர் எண்- 1571)

நால்வகை படையும், தனக்கென கொடியும், வெண்கொற்றக் குடையும், முரசும், குதிரையும், யானையும், தேரும், மாலையும், தலைப்பாகையும், அரியணை, அரண் போன்றவைகள் அரசர்க்குரியவைகள்.

''அந்தணர்க்கு அரசு வரைவு இன்றே.'' (தொடர் எண்- 1574)

அந்தனர் அரசராக முடியாது.

''வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை.'' (தொடர் எண்- 1578)

வைசியன் வணிகம் செய்து வாழ்வான்.

''கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே.'' (தொடர் எண்- 1580)

அரசர்க்குரிய தலைப்பாகை, மாலையும் வணிகர்க்கும் உண்டு.

''வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.'' (தொடர் எண்- 1581)

வேளாளர்களுக்கு பிற தொழில்களைவிட, உழவுத்தொழிலே சிறந்த தொழிலாகும்.

''வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே.'' (தொடர் எண்- 1582)

அரசர்களிடமிருந்து வேளாளர் போர்படைகளையும், அரசன் அணியும் தலைப்பாகை பெருமையையும் பெருவர். (போர் தளபதி; மந்திரி)

இதில் பிராமணனை எந்த இடத்தில் அதிகார வர்க்கமாக சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது? அப்படி இருந்தால் பிராமணன் அரசாளலாம் என்று சொல்லப்பட்டிருக்குமே? ஆனால், தொல்காப்பியத்தில் பிராமணன் அரசாள முடியாது என்றுதான் கூறுகிறது.

தொல்காப்பியம் சொல்லும் மரபியலில், இதுதான் நான்கு வருணம் என்பது. இதில் யார் சூத்திரன்? எங்கே சூத்திரன் ?

சூத்திரன் பற்றி தமிழ்நாட்டில் வெகுவிசாலமாக சொல்லிக்கொண்டிருக்கும் பொய்கள் தொல்காப்பியத்தில் கிடையாது.

நான்கு வருணங்கள் என்பது அவரவர் தொழில்கள். அதில் யாரையும் இழிவுபடுத்தப்படவில்லை. வருணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அத்தனை வண்ண மலர்களும் ஒன்றாய் சேர்ந்து இறைவன் திருமேணியை அலங்கரிக்கும் பூமாலைப்போன்றதுதான். இதில் எந்த மலர் உயர்வு என்ற பேச்சுக்கு இடமில்லை. வருணங்கள் வேறாக இருந்தாலும் மதத்தால் நாம் இந்துக்கள் என்ற ஒற்றுமையை உடைத்து, இந்து மதத்தை அழிக்கும் நோக்கத்தில் கிறிஸ்தவ இஸ்லாமிய ஆதரவு கைக்கூலிகள் பகுத்தறிவு நாத்திக வேடம் அணிந்துக்கொண்டு இந்துக்களிடையே நம்பிக்கையை சீர்குலைக்க, அவர்களுக்குள் ஒற்றுமையை சீர்குலைக்க பிராமணர் பிராமணர் அல்லாதவர்களை பிரித்து எதிரும் புதிருமாக பகைமையை உறுவாக்கி மோதவிட்டு இன்றுவரையிலும் அவர்களிடத்தில் விரோத்தத்தனமையை விதைத்துக்கொண்டிருக்கிறது. அதனாலேயே பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கு நிறந்தர பகைவர்கள் என்ற ஒரு மாயை உறுவாக்கி வைக்கப்பட்டுள்ளது. இது அகற்றப்படவேண்டும். நான் ஒரு இந்து என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு பிராமணர் பிராமணர் அல்லாதவர்களிடையே ஒற்றுமையும், நட்பும், நல்லிணக்கமும் ஓங்கவேண்டும். ஒன்றுகூடி எதிர்த்து நின்றால்தான் இந்துமதத்திற்கு ஆபத்து விளைவிக்கும் எதிரிகளை விரட்டியடிக்கமுடியும்!
Mehr anzeigen

2 comments:

  1. அருமையான விளக்கம். மொகலாயர்கள் வந்தார்கள். அவர்கள் தான் ஆட்சி செய்தார்கள். அவர்கள் மொழியை திணித்தார்கள். ஆங்கிலேயர்கள் வந்தார்கள் அவர்கள் தான் ஆட்சி செய்தார்கள். ஆங்கிலத்தை திணித்தார்கள். அப்படியானால் பார்ப்பணர்கள் வெளியில் இருந்து வந்தார்கள் எனில் அவர்கள் தானே ஆட்சி செய்திருக்க வேண்டும். அவர்கள் மொழியை திணித்திருக்க வேண்டும். மாறாக அந்தணர்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட பொருள் சேர்க்க கூடாது என்று தானே நீதி நூல்கள் சொல்கிறது. இப்படி இருக்கையில் தமிழன் என்னவென்றால் பார்ப்பணர்கள் தான் ஆட்சி செய்தார்கள் என்று பொய்யுரைக்கிறான்

    ReplyDelete