காசியில் பிறந்து வளர்ந்தவர் சோமதேவன். இவர், பிறந்ததில் இருந்தே கங்கையில் குளிப்பது, கங்கையால் பாவங்கள் கழுவப்படுவது குறித்து ஆராய்வது என இருந்தார். தேவையில்லாமல் யாரிடமும் பேசமாட்டார். ஒரு கட்டத்தில் பெற்றவர்களைப் பிரிந்து, துறவியாகி விட்டார். இமயமலைச் சாரலில் ஒதுக்குப்புறமாக அமர்ந்து தெய்வநாமங்களை உச்சரித்தபடியே இருப்பார். பல சமயங்களில் பசி, தூக்கத்தை மறந்து அப்படியே தியானத்தில் ஆழ்ந்துபோய் விடுவார். இதனால், இவரது ஆன்மிக பலம் பெருகியது. தெய்வசிந்தனையைத் தவிர வேறெதுவும் இல்லாத இவருக்கு ஏதாவது வரமளிக்க வேண்டும் என முடிவு செய்த தேவர்கள் இமயமலைக்கு வந்தனர். அவர்களை துறவி பணிவுடன் வணங்கினார்.
""துறவியே! தங்கள் ஆன்மிக சாதனைகளைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம். வேறு எதையுமே நினையாமல், ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக மட்டும் ஏதோ சாப்பிட்டு உயிர்வாழும் தாங்கள், தேவர் நிலைக்கு உயர்ந்து விட்டீர்கள். நாங்கள் உங்களுக்கு வரமளிக்கவே வந்தோம். நீங்கள் ஏதாவது கேளுங்கள், என்ன கேட்டாலும் தருகிறோம். தங்களைப் போன்ற நல்லவர்கள் அந்த வரத்தை உலக உயிர்களின் நலத்துக்குப் பயன்படுத்துவீர்கள் என்பதை அறிவோம். எனவே தங்களுக்கு பலவித சித்திகளைத் தருகிறோம், கேளுங்கள்,'' என்றனர் அன்புடன்.
துறவி தனக்கு எதுவும் வேண்டாம் என மறுத்தார். கேட்டுத்தான் ஆக வேண்டும் என தேவர்கள் வற்புறுத்தவே,""தெய்வஅருள் கிடைக்க வேண்டும். அதைத் தவிர கேட்க வேறு ஏதுமில்லை,'' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் சோமதேவர். தேவர்கள் விடுவதாக இல்லை.
""துறவியே! தாங்கள் விரும்பாவிட்டாலும் பரவாயில்லை. இந்த உலக உயிர்களின் நோய் தங்கள் கைபட்டாலே தீர்ந்துவிடும் வரம் தருகிறோம். இதன்மூலம் தங்களுக்கு உயிர்களின் மீதுள்ள அன்புநிலை வெளிப்படும். இதன்மூலம் தாங்கள் புகழும் பெறுவீர்கள். பூமியில் வாழ்வதே புகழ் அடைவதற்காகத்தானே!'' என்றார்கள் மிகவும் பவ்வியமாக.
""தேவர்களே! புகழுக்காக ஒருவன் செய்யும் செயல்கள் அர்த்தமற்றவை. நோயைத் தீர்ப்பது என் வேலையல்ல. எந்த இறைவன் உயிர்களைப் படைத்தானோ அவனால் மட்டுமே மக்களின் நோயைத் தீர்த்து வைக்க முடியும். நாமாக தீர்த்து வைத்தால் மக்கள் நம் புகழ் பாடுவார்கள். ஆனால், இறைவனை மறந்து விடுவார்களே! இறைவனை மறக்கடிக்கவா நாம் இவ்வளவு பாடுபடுகிறோம்,'' என்று அந்த வரத்தையும் ஏற்க மறுத்தார். அப்போதும் விடாத தேவர்கள், ""தங்கள் கருத்தை ஏற்கிறோம். நீங்கள் செய்யும் நற்செயல் உங்களுக்கே தெரியாத வகையில், உயிர்களுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அருள்கிறோம்,'' என்றார்கள்.
அதையும் ஏற்க மறுத்தார் துறவி. ""தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சேவையால் வரும் பலனும் புண்ணியமும் எனக்குத் தேவையில்லை. அதுவும் ஒருவகையில் சுயலாபமே,'' என்றார்.
இப்படிப்பட்ட உயர்ந்த குணமுள்ள அவருக்கு, அந்த துறவியே அறியாத வகையில் அவர் எங்கு சென்றாலும், மக்களின் துன்பம் நீங்கும் வகையிலான சக்தியைக் கொடுத்துவிட்டு தேவர்கள் சென்றுவிட்டனர். அந்தத் துறவி ஏதாவது ஊருக்குள் நுழைந்தாலே, அங்கு வசித்தவர்கள் கொண்ட ஆசைகள் நிறைவேறிவிட்டன. நோயாளிகள் துன்பம் நீங்கி துள்ளிக்குதித்து வேலை செய்ய ஆரம்பித்தார்கள். இதையறியாத துறவி, இறைநினைப்புடன் காலத்தைக் கழித்து இறைவனின் திருவடியில் ஐக்கியமாகி பிறவாநிலை என்னும் பெரும்பேறு பெற்றார். சுயநலமின்றி இறைவன் மீது காட்டும் பக்தியே, உலகில் நிலைத்து நிற்கும் என்பதற்கு சோமதேவ துறவியை உதாரணமாகக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment