துவாதசி திதியில் அண்ணாமலையில் அன்னதானம்
நமது கர்மவினையைப் போக்கும் சக்தி அன்னதானத்திற்கு உண்டு.அன்னதானத்தில் ஒரு போதும் அசைவம் படைக்கக் கூடாது.
நள்ளிரவில் அன்னதானம் செய்வதும் தவறு.அன்னதானம் செய்யும்
போது யாரையும் வற்புறுத்தி,சாப்பிடச் சொல்லக்கூடாது.அன்னதானம்
செய்யும் விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கவேண்டும்.இதனால்
மற்றவர்களின் பொறாமையிலிருந்து தப்பிக்கமுடியும்.தமிழ்நாட்டில்
மிகவும் சுலபமான தொழில் பொறாமைப்படுவதுதான்.
நமது சொந்த ஊரில் அல்லது வசிப்பிடத்தில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம்
பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம்
கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில்
ஒரே ஒருவருக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசியில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்வீதம் ஓராண்டுக்கு தினமும்
அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,
அவ்வளவு புண்ணியம் திருஅண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில்
ஒரே ஒரு வறியவருக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
துவாதசி திதி அன்று திருஅண்ணாமலையில் ஒருவருக்கு அன்னதானம்
செய்தால்,அன்னதானம் செய்தவர் தனது வாழ்நாள் முழுக்க அன்னதானம்
செய்த புண்ணியத்தைப் பெறுவதோடு,அவருக்கு மறுபிறவியில்லாத
முக்தி கிடைக்கும் என அருணாச்சலபுராணம் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment