Monday, June 27, 2011

கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை. சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு. அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். "கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே' என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாகக் கூறுவதாகும். இப்பழமொழி "கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு' என்று குறிப்பிடுகிறது

No comments:

Post a Comment