Thursday, February 9, 2012

27 நட்சத்திரங்களுக்கும் முருகன் பாட்டு

ராசிபலனை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பலர். பூர்வஜென்ம பாவபுண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராசி மண்டலத்தில் அசுவினி முதலாக ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து ராசி அமைகிறது. அருணகிரிநாதர் "கந்தர் அலங்காரம்' என்னும் நூலில், நட்சத்திர நாயகனான முருகப்பெருமானை வழிபாடு செய்யும் அன்பர்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று உறுதிபடக் கூறுகிறார்.
""நாள் என்செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோள்என் செயும்
கொடுங்கூற்றென் செயும், குமரேசர்
இரு தாளும் (இரண்டு பாதங்கள்),
சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),
சதங்கையும் (இரண்டு சலங்கையும்),
தண்டையும் (இரண்டு தண்டைகள்),
சண்முகம் (ஆறு முகங்கள்)
தோளும் (12 தோள்கள்)
கடம்பும் (கடம்பு மாலை)
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
உறுப்பு மற்றும் அணிகலன்களான இருபத்தி ஏழும் நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. கந்தர் அலங்காரத்தில் இடம்பெறுள்ள இப்பாடலைப் பாடும் அன்பர்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும். 

1 comment:

  1. ஒளியுடல் ஆக்கும் இரகசியம்
    உங்கள் நட்சத்திரமே உங்கள் விருப்பங்களைநிறைவேற்றும் ரகசியம்
    http://saramadikal.blogspot.in/2013/06/10.html
    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    இவண்

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete