பஞ்சமகாபாதகங்கள்
பஞ்சமகாபாதகங்கள்
1.கள்
2. காமம்
3. கொலை
4. களவு
5. பொய்
இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டு பண்ணும். இவ்வைந்திலும் கொலை விசேஷ பாவம் என்னினும் 1. கள் உண்டவனுக்கு 2. காமம் உண்டாகாமல் இருக்காது. 3. கொலை செய்யத் துணிவு வராமல் இராது. 4. களவு செய்யாமல் இரான் 5. பொய் பேச அஞ்சான். ஆகையால் இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஒன்றை அடைந்தவன் ஆனாலும் அவனை மற்றவை தொடராமல் இரா.
அறிந்துசெய்யும்பாவங்கள்
மனிதர்கள் 1. மோகத்தாலும், 2. மறதியாலும் 3. அபிமானத்தாலும், 4. அகங்காரத்தாலும் 5. செல்வச் செருக்காலும், 6. தாட்சண்ய உடன்பாட்டாலும், 7. உணவு பற்றியும் 8. புகழ்பற்றியும் 9. வழக்கம் பற்றியும் பாவச் செயல்களைச் செய்கின்றனர்.
அறியாமல்செய்யும்பாவங்கள்
நடக்குங் காலத்திலும், நீராடுங்காலத்திலும், சயன காலத்திலும், தனக்குத் தோன்றாமல் பாவங்கள் நேரிடக் கூடும். இதன்றி அவை மனத்திற்குப் புலப்படாமலும் உண்டாகு
புலால் உண்பவர்கள் மூன்று மிகப் பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் ஆவார்கள் அவைகள்
1. தம் உடம்பிலுள்ள கடவுள் விளக்கத்தை மாசு படுத்தி விடுகின்றனர். அதாவது தன் உள்ளத்தை இருளாக்கிக் கொள்கின்றனர்.
2. கொல்லப்படுகின்ற ஜீவனில் உள்ள கடவுள் விளக்கத்தை அழித்துவிடுகின்றனர். அதாவது மனிதன் மனித நிலையிலிருந்து விலங்கு நிலைக்கு இறங்கி விடுகின்றான்?
3. இறைவனின் பெருந்தன்மையுள்ள, பெருங்கருணை உள்ள பெரு நோக்கத்துக்கு எதிரக செயல்படுகின்றனர்.
என்ன ஒரு முட்டாள்தனமனான கட்டுரை ,
ReplyDelete1. உயிர்களிடத்தில் இறக்கம் காட்டவேண்டும் என்றால் அரிசி காய் கனி கிழங்கையும் சாப்பிடகூடாது ,
2. உடலுக்கு தேவையான சக்தி மாமிசத்தில் உள்ளது , அதுபோக மனம் நிம்மதியடைகிறது
3. அகோரிகள் மனித பினத்தியே சாப்பிடுகிறார்கள் அவர்கள் கேடுகேட்டவர்களா?
4. எல்லா ஜீவராசியும் கடவுளின் அம்சம் பிறகு என் அசுரர்களை கடவுள் தண்டித்தார் முட்டாள் கடவுளாக இருப்பாரோ? செடி கொடிகளை உண்ணலாமா? காய் கனி கீரை கிழங்கு இவையெல்லாம் உயிரற்றவையா ?
5. வேதம் காலம் முதல் புத்த மதம் தோன்றும் வரை சாப்பிட்ட மனிதர்கள் ஆன்மீக நிலை அற்றவர்கள் பிறகு எப்படி அவர்கள் சொன்ன கதைகளை பின்பற்றமுடியும்