சிவனடியார்களில் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவன் 
கோயிலுக்குச் சென்று, இவரை தரிசிக்காமல் திரும்பினால், கோயிலுக்கு சென்ற பலன் 
கிடைக்காது என்பது ஐதீகம். வலக்கையின் நடு விரல்கள் மூன்றையும் இடக்கையால் தட்டுவது 
போல கையை வைத்து இவரை வழிபட வேண்டும். ஆனால், சத்தம் வரக்கூடாது. சிவதியானம் 
கலைந்து விடும் என்பதால் இவர் சந்நிதியில் ஒலி எழுப்புவதோ, நூலைப் பிய்த்து போடுவதோ 
கூடாது. இவரைச் சுற்றி வந்து வழிபடவும் கூடாது. நிர்மாலயதீர்த்தம் என்னும் அபிஷேகம் 
விழும் கோமுகியைத் தாண்டக் கூடாது என்பதால் இவரது சந்நிதியைச் சுற்றும் வழக்கம் 
இல்லை. இவர் நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்கிறார்
நீங்கள் பதிவு செய்து இருப்பது போல் வலக்கையின் நடு விரல்கள் மூன்றையும் இடக்கையால் தட்டுவது போல கையை வைத்து இவரை வழிபட வேண்டும். ஆனால், சத்தம் வரக்கூடாது.இதுதான் மிக முக்கியமானது.ஆனால் அறியாமையினால் சிலர் அவரைக் காது கேட்காதவராகப் பாவித்து அவர் சன்னதியில் கை தட்டி ஓசை எழுப்பி வழிபாடு செய்கிறார்கள்.இந்தத் தவறான பழக்கம் இன்றும் தொடர்வடதை நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கண்டு வேதனை அடைவதுண்டு.கோவில் நிர்வாகத்தினராவது இது குறித்து அங்கே ஒரு அறிவிப்பு பலகை வைக்கலாம்!
ReplyDelete