கரன், தூஷணன் என்பவர்கள் ராவணின் சகோதரர்கள். அவர்கள் ஜனஸ்தானம் என்ற பகுதியில்
இருந்து ஆட்சி செய்தனர். முனிவர்களைத் துன்புறுத்துவது அவர்களின் அன்றாடப்பணி.
யாரொருவன் சாதுவோ, அவனைத் துன்புறுத்துபவன் விரைவில் அழிந்து விடுவான். ஏனெனில்,
சாதுவின் சாபம் பொல்லாதது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பர். அந்த சாதுக்கள்
செய்வதறியாமல் திகைத்தனர்.
ஒருமுறை, லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை, தன் அண்ணன்மாரான கர தூஷணரிடம் முறையிட்டாள். கோபமடைந்த அவர்கள், 14 அசுரர்களை அனுப்பி, ராமலட்சுமணரைக் கொல்ல உத்தரவிட்டனர். ஆனால், ராமபாணம் எல்லாரையும் அழித்தது. ஆச்சர்யமும் கோபமும் அடைந்த கர தூஷணர் நேரடியாகக் களத்தில் இறங்கினர். அவர்களும் கொல்லப்பட்டனர். தப்பிப்பிழைத்த அகம்பனன் என்ற வீரன் மட்டும் ராவணனிடம் ஓடினான். நடந்ததைச் சொன்னான். தம்பியரின் பிரிவால் ராவணன் துடித்தான்.
ராமலட்சுமணரைக் கொல்ல முடிவெடுத்தான். உடனே அகம்பனன்,"" ஐயனே! ராமனை வீரத்தால் அழிப்பது சிரமம். ஆனால், பாசத்தால் அழித்து விடலாம். அவன் தன் மனைவியும், பேரழகியுமான சீதையின் மீது பாசம் வைத்துள்ளான். அவளைக் கடத்தி விட்டால், பிரிவு தாளாமல் இறந்து விடுவான்,'' என்றான்.'
இந்த யோசனையை ஏற்ற ராவணன் சீதையைக் கடத்தினான். ஆக, சீதை கடத்தப்பட்டதற்கு காரணம் அகம்பனன் ஆகிறான்.

No comments:
Post a Comment