ஆனி மாதத்தில் பிறந்த மூத்த மகனுக்கும் அதேபோல் ஆனி மாதத்தில் பிறந்த மூத்த மகளுக்கும்(மருமகள்) ஆனி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது.அப்படிச் செய்தால் அவர்கள் குடும்பவாழ்க்கை,சந்தோஷம்,புத்திர பாக்கியம் முதலியவை பாதிக்கப்படும்.மேலும் இதற்கு பரிகாரமே இல்லை என்கிறது "உத்தர காலாம்ருதம் "என்ற நூல்
தலைச்சன் ஆணுக்கும்,தலைச்சன் பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா?
ReplyDelete------------------------------------------------------------------------------------------
தலைச்சன் பிள்ளை என்பவர் ஒரு குடும்பத்தில் முதலில் பிறந்தவர்.பெரும்பாலும் நடைமுறையில் தலைச்சனுக்கும்,தலைச்சனுக்கும் திருமணம் செய்யக்கூடாது என பெரும்பாலனவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஜேஷ்ட மாதத்தில்,ஜேஷ்ட நட்சத்திரத்தில் ஜேஷ்ட ஆணுக்கும்,பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என உத்திர காலாமிர்தம் கூறுகிறது .ஜேஷ்ட மாதம் என்றால் ஆனி,ஜேஷ்ட நட்சத்திரம் என்றால் கேட்டை,ஜேஷ்ட குழந்தை என்றால் மூத்த குழந்தை.அதாவது ஆனி மாதத்தில்,கேட்டை நட்சத்திரத்தில்,மூத்த ஆணுக்கும்,பென்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்பது உண்மையான கருத்தாகும்.
இவையே தற்போது மக்களிடையே திரிந்து தலைச்சனுக்கு தலைச்சன் திருமணம் செய்ய கூடாது என மருவி நம்பிக்கையாக தொடர்கிறது.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
nanri
Delete