சிவம் என்ற
சொல்லுக்கு மங்களம் என்றும்,என்றும் இருப்பது என்றும் பொருள் உண்டு.முருகன்
என்பதற்கு அழகு,இளமை என்று பொருள் உண்டு.அது போலவே பைரவர் என்ற சொல்லுக்கும் பொருள்
உண்டு.
“ப” என்பது
காத்தலைக் குறிக்கும்; “ர” என்பது அச்சத்தால் உணர்த்துதலைக் குறிக்கும்; “வ” என்பது
படைத்தலைக் குறிக்கும்.முத்தொழிலையும்(படைத்தல்,காத்தல்,அழித்தல்) இச்சொல்
உணர்த்துகிறது.
இதேபோல்
“ப” என்பது பரணத்தை(உயிர்களைப் படைக்கும் தொழிலை)க் குறிக்கும்; “ர” என்பது
ரமணத்தை(உயிர்களைக் காப்பதை)க் குறிப்பிடுகிறது; “வ” என்பது வமனத்தை(உயிர்கலின்
இயக்கத்தை அழித்து,பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்வதை)
உணர்த்துகிறது.
பைரவம்
என்னும் சொல்லுக்கு தன்னை உபாசிப்பவனைக் காப்பவன் என்ற பொருளையும், தன் அடியார்களை
துன்புறுத்துவோர்களை பயமுறுத்தி அழிப்பவன் என்ற இருவேறுபட்ட பொருள்களையும்
குறிக்கும்.
No comments:
Post a Comment