நாள் கணக்கில் கப்பலில் பயணம் செய்து கடல் கடந்து வேறு நாட்டுக்குச் சென்ற போது பரிகாரம் தேவைப்பட்டது. மூன்று வேளை சந்தியாவந்தனம் அனுஷ்டானம் செய்பவர்கள் நிறைவில் பூமியில் சிறிது தண்ணீர் விட்டு அதைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். கப்பலில் பயணம் செய்யும் போது இது சாத்தியப்படாததால் பரிகாரம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது விமானத்தில் பயணிக்கும் காலமாதலால் அனுஷ்டானக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, பரிகாரம் தேவையில்லை. அதே நேரம் ஒரு விஷயத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். அனுஷ்டானங்களையும், இறைவழிபாட்டையும் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது என்பது தான் ஆன்றோர் வகுத்துள்ள நல்வழி.
No comments:
Post a Comment