தாளத்தோடு கூடிய ராகம் தான் இனிக்கும். வெறும் ராகமாக பஜனை பாடுவதை விட
மிருதங்கமோ, குறைந்தபட்சம்ஒரு வெண்கலத் தாளமோ வைத்துக் கொண்டால் அதன் இனிமையே அலாதி
தான்.
இவ்வாறு தாளம் வைத்துக் கொள்ள காரணமும் உண்டு. சிவபெருமான் நடராஜராக நர்த்தனம் புரியும் போது,வாசிக்கப்பட்டதை "ஹரிதாளம்' என்பர். ராமாயணத்தில் ராமனின் பிள்ளைகளான லவகுசர்கள், ராமாயணக்கதையை சொல்லும்போது தாளத்துடன் பாடியதாக தகவல் இருக்கிறது. கோகுலத்தில், கோபியர்கள் நடனமிடும் போது தாளம் வைத்துக் கொண்டனர். சுகபிரம்மர் பாகவதம் சொன்னபோது, பிரகலாதர். உத்தவர் ஆகியோர் தாளம் இசைத்ததாக பத்மபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சீர்காழி அருகிலுள்ள தாளபுரீஸ்வரர் கோயிலுக்கு ஞானசம்பந்தர் வந்து, சிவனைப் பாடிய போது, சிவன் அவருக்கு தங்கத்தாளம் கொடுத்தார். அந்த தாளத்தில் சத்தம் எழாததால், அம்பாள் வெண்கலத்தாளம் கொடுத்தாள். அதனால் அம்பாளுக்கு "ஓசை கொடுத்த நாயகி' என்று பெயர் வந்தது. இந்த தகவல்களை மருதாநல்லூர் சுவாமிகள் அருளியிருக்கிறார்.

பொற்தாளத்திற்கு ஓசை அம்பாள் கொடுத்தாலே ஒழிய நீங்கள் குறிப்பிட்டது போல் வெண்கலத்தாளம் கொடுக்கவில்லை தவறான கருத்துக்களை பதியாதீர்கள்
ReplyDelete