Monday, October 1, 2012
ஆண்டாள்---கோதை சூடிய மாலையே எனக்கு பிரியமானது
திருப்பாவை வைணவ ஆழ்வார்களில் ஒரு வரான ஆண்டாள் பாடிய நூல்.திருப்பாவை நாயகி ஆண்டாள் பற்றி ஒருஅறிமுகம். ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள். திரு விஷ்ணுசித்தர் என்ற ஒரு பக்தர் தினமும் கண்ணனுக்கு நந்தவனத்தில் மலர் பறித்து மாலையாய் தொடுத்துபெருமாளுக்கு சேவிப்பார்.
ஒரு நாள் நந்தவனத்தில் துளசி செடி அருகே ஓர் அழகியப் பெண் குழந்தையைக் கண்டார்.ஸ்ரீ வில்லிப்புத்தூர் வடபத்ரசாயி பெருமாள் அளித்த பாக்கியம் என்று நினைத்து அந்த பெண் குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டார். அந்த குழந்தைக்கு எல்லா கலைகளும்,தமிழ் வேதாந்தம்,நல்லொழுக்கம் என்று முறையாக வளர்த்துவந்தார்.
சிறு வயதிலிருந்து கண்ணனின் கதைகளையும்,அவன் யசோதை தாயிடம் கொண்ட அன்பும்,
கோபியர்களிடம் செய்த குருன்புதனம் இப்படி கண்ணை பற்றி கேட்கக் கேட்க அவரின் மீது அளவில்ல காதல் கொண்டு அவரையே மணக்க வேண்டும் என்று அவரின்பால் கொண்ட அன்பினால் அவரை நினைத்து நினைத்துஅவருடன் ஓடி விளையாண்டு பேசி மகிழ்ந்து கற்பனை உலகில் மிதந்தாள்.
இவ்வாறு , தினமும் கண்ணனுக்கு தொடுத்த மாலையை தானே அணிந்து கொண்டு அதை பார்த்து ரசித்த பின்கண்ணுக்கு அணிவிப்பால்.ஒரு நாள் கோதையின் அப்பா மாலையை கோவிலுக்கு எடுத்துப் போகும் போது அதில் கோதையின் நீள முடி இருந்ததைப் பார்த்துவிட அதனால் கோதையை கடிந்து கொண்டு வேறொரு மாலையை தொடுத்து அணிவித்தார்.
அந்த மாலையை ஏற்க மறுத்த பெருமாள்,அன்று இரவு பெரியாழ்வார் கனவில் வந்து "கோதை சூடிய மாலையே எனக்கு பிரியமானது "என்று கூறி மறைந்தார்.
கோதை கண்ணின் மீது கொண்ட காதலினால் அவரையே மணப்பதாக கூறினார். ஒரு நாள், பெரியாழ்வார் கனவில்வந்து ஆண்டாளை மனப்பதாகவும் ஸ்ரீ ரங்கத்துக்கு மணப்பெண்ணாக அழைத்து வரும்மாறு கூறினார். அங்கு கருவறைக்குள் ஆண்டாள் சென்றதும் மறைந்து இறைவனடி சேர்ந்துவிட்டார்.
கண்ணனை அடைய பாவை நோன்பு எனும் விரதத்தை மார்கழி மாதத்தில் மேற்கொண்டால் போது மென நாரதர் கோபியரிடம் கூறியதாக ஒரு ஐதீகம். இதானால் தான் திருப்பாவை தோன்றியது. திருப்பாவையில் ஆண்டாள்,ஸ்ரீ வில்லிப்புத்துரை ஆயர்பாடியாகவும்,தன் தோழியரை கோபியராகவும் உருவகித்து.பாவை நோன்பிருகாக கோபிகளை அழைத்து செல்வது போல எழுதயுள்ளர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment