Wednesday, October 3, 2012
காதறந்த ஊசி
ஊசி ஒன்று தன் ஒரு முனை கூர்மையாக இருப்பதில் பெருமையடைந்தது. ஆனால் தன் மறுமுனை ஓட்டையாக இருப்பதால் அதை அவமானமாகவும் நினைத்தது.
ஒரு நான் அதன் மறுமுனை உடைந்து போனது. காதறந்த நிலையில் அந்த ஊசியைப் பயன்படுத்தியவர் தூக்கியெறிந்தார்.
அப்போதுதான் அந்த ஊசிக்குத் தான் அவமானமாக நினைத்த மறுமுனையின் முக்கியத்துவம் தெரிந்தது.
ஒருவர் கூர்மையான புத்தியுள்ளவராக இருந்தால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது. கூர்மையான ஊசி தன்னுள் நூலை நுழைத்துக் கொள்ள காது இருப்பதால் தான் அது பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.
காதறந்த ஊசி பயன் இல்லை. அது போல் பிறரைத் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் அன்பு இருந்தால் மட்டுமே சிறந்தவனாகத் திகழ முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment