Wednesday, October 3, 2012
பூனை குறுக்கே சென்றால் பரிகாரமாக என்ன செய்யவேண்டும்?
* பூனை குறுக்கே சென்றால் பரிகாரமாக என்ன செய்யவேண்டும்?
தொட்டதற்கெல்லாம் சகுனம் பார்த்து நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்பதே எல்லாவற்றிற்கும் சிறந்த பரிகாரம். முக்கிய அலுவல் நிமித்தமாக செல்லும்போது இது போன்ற விஷயங்கள் நடந்தால், மீண்டும் வீட்டிற்குள் சென்று சிறிதளவு தண்ணீர் பருகிச் சென்றால் போதும்.
* வீட்டில் ஒருவிளக்கு மட்டும் ஏற்றக் கூடாதாமே? எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்.
பூஜையறையில் இருவிளக்குகள் ஏற்ற வேண்டும். மாலையில் வாசல் நிலைக்கருகில் ஒன்றும், துளசிமாடத்தில் ஒன்றும் ஏற்ற வேண்டும்.
* வீட்டில் உள்ள விநாயகர் சிலைக்கு அருகம்புல் மாலை சாத்தலாமா?
தாராளமாகச் சாத்தலாம். தினமும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துவதோடு பசுவிற்கும் அருகம்புல் கொடுத்தும் வாருங்கள். துன்பம் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment