Monday, October 1, 2012
நம்பிக்கையே வாழ்க்கை
சிவபெருமானும் பார்வதியும் ஒருநாள் வானவீதியில் பட்டின பிரவேகம் செய்து கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் மட்டும் மிகவும் அதிகமான மக்கள் குழுமி குளிப்பதைப் பார்த்த பார்வதி நாம் எவ்வளவோ இடத்தை சுற்றிப்பார்த்து வந்து கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்த இடத்தில் மட்டும் மக்கள் அதிகமாக குளிப்பதற்கு என்ன காரணம் எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறுகிறார்.இது மிகவும் புனிதமான ஸ்தலமாகும் இந்த இடத்திற்கு பெயர் காசி.
இங்கு ஓடும் நதியில் குளிப்பவர் பாவம் நீங்கி புனியம் பெற்று சொர்க்கலோகம் செல்லலாம் என நினைத்து குளிக்கிறார்கள் என கூற உடனே பார்வதி அப்படி என்றால் இந்த புனிய நதியில் குளிப்பவர் எல்லோரும் சொர்க்கலோகம் செல்வார்களா எனக் கேட்க அதற்கு சிவபெருமான் எல்லோரும் செல்ல மாட்டார்கள் ஒரு சிலர் மட்டும் தான் செல்வார்கள் என கூற மற்றவர்கள் ஏன் போகமாட்டார்கள் ,என பார்வதி கேட்க நான் சொன்னால் புரியாது.
நாமே ஒரு நாடகம் ஆடுவோம் அதன் முடிவில் நீயே தெரிந்து கொள்வாய் எனக்கூறி சிவபெருமான் ஒரு நோயாளிபோல் நதிக்கரையில் உருமாரி உயிர் போய் பிணமாக படுத்து உள்ளார்.பார்வதியும் உருமாரி தலை விரிகோலமாக அழுது புலம்புகிறார்.நேரம் செல்ல செல்ல கூட்டம் கூடி விட்டது யாரோ யாத்திரை வந்த இடத்தில் இந்த பெண்ணின் கணவன் இறந்து விட்டான். ஒருவன் அந்த பெண்ணிடம் வந்து உன் கணவன் உடலை தகனம் செய்ய நாங்கள் உதவி செய்கிறோம்.எனக் கூற அதற்கு அந்தப் பெண் அய்யா ,என் கணவன் இறக்கும் போது ஒன்று கூறினார்.
அது என்னவென்றால் என் உடலை தகனம் செய்பவர் பிறந்ததிலிருந்து இன்று முதல் யாருக்கும் சிருபாவமேனும் செய்யாதவர் தான் என் உடலை அடக்கம் செய்ய வேண்டும்.அப்படி செய்த பாவத்தை மறைத்து அடக்கம் செய்தால்.அவர்கள் தலை சுக்குநூறாய் உடைந்து போய்விடும் மேலும் ஏழு பிறப்பிலும் கழுதையாக பிறப்பார்கள் என்று கூறியவுடன் அருகில் நின்றவர்கள் பயந்து போய் விட்டார்கள் நேரம் போய் கொண்டிருந்தது.சூரியனும் மறைய தொடங்கி விட்டது.
அப்போது வாட்டசாட்டமாக வாலிபன் வந்து நான் உன் கணவன் உடலை அடக்கம் செய்கிறேன் எனக் கூற என் கணவன் கூறியது உனக்கு தெரியுமா? என கேட்க அதற்கு எல்லாம் எனக்கு தெரியும். நான் இந்த நதியில் குளித்தவுடன் நான் செய்த பாவம் நீங்கிவிடும்.பின் உன் கணவன் உடலை தகனம் செய்ய தகுதிடையவன் ஆவேன்.என கூறி நதியில் குளித்துவிட்டு வந்து பார்த்தல் அவர்களை காணவில்லை.
அப்போது சிவபெருமான் பார்வதியிடம் இவன் தான் சொர்கலோகம் செல்வான். ஏனென்றால் இவன் தான் இந்த நதியை நம்பினான்.மற்றவர்கள் எல்லாம் நதிக்கரையில் தான் நின்றார்கள் ஏன் இந்த எண்ணம் வரவில்லை அவர்களுக்கு இந்த நதி மீது நம்பிக்கை இல்லை எனக்கூறினர்.ஆகவே நம்பிக்கையே வாழ்க்கை.
பாவங்கள் செய்தவர்கள் எல்லோரும் கங்கையில் குளித்ததினால் அவர்களின் பாவங்கள் எல்லாம் கங்கையில் நிரம்பி இருந்தது.ஸ்ரீ ராமர் வந்து கங்கையில் குளித்தவுடன் அதில் உள்ள பாவங்கள் எல்லாம் மறைந்து விட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment