மனதின் தொடர்பு இல்லாவிட்டால், ஒன்றைப் பற்றி நமக்கு தெரியாது. காலையில் ஒருவர்
எழுந்தார். தலையணையை எடுத்தார். அடியில், நான்கைந்து பாம்பு குட்டிகள் இருந்தன.
பயத்தில் நடுங்கிவிட்டார். உறங்கும்வரை அவருக்கு பயம் தோன்றியதா என்றால்...இல்லை.
ஏனெனில், மனதின் சம்பந்தம் அப்போது இல்லை.
அனுமனுக்கும் இப்படி ஒரு மன சம்பந்தமான சம்பவம் நிகழ்ந்தது. அவர் சீதையைத் தேடி இருளில் இலங்கை முழுவதும் உள்ள மாளிகைகளில் தேடினார். பல இடங்களில் ராட்சஷிகள் அலங்கோலமான கோலத்தில் படுத்திருந்தனர். வேலை முடிந்ததும், ""ஐயோ! இவர்களின் வீடுகளில் எட்டி எட்டி பார்த்தோமே! பெண்கள் உறங்கும்போது, பார்ப்பது மகா தவறல்லவா!'' என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதன்பின், ""இதில் ஏதும் தவறில்லை...நான் யாரையுமே மனதினால் பார்க்கவில்லையே! என் நோக்கம், படுத்திருந்த வர்களின் நடுவே சீதை இருக்கிறாளா என்பதை அறிவது மட்டுமாகத்தான் இருந்தது. உஹும்...நான் தவறு செய்யவில்லை,'' என்று மனதைத் தேற்றிக்கொண்டார்.

No comments:
Post a Comment