இறந்தவருக்கான கர்மாக்கள் சரியாக செய்யப்படவில்லை என்றால் ஒரு சில கெட்ட கனவுகள்
தோன்றும். இவ்வாறு கனவு ஏற்பட்டால் நாம் செய்த செயல்களில் ஏதாவது தவறு உள்ளதா என
பெரியோர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம். மிகப்பெரிய தவறு ஏற்பட்டிருந்தால் அந்த
கர்மாவை மறுபடி செய்யலாம்.
அதாவது கர்தா மாறுதல், பிண்டம் சமைக்கும் பாத்திரம் மாறிவிடுதல், பிண்டத்தை போடும் இடம் மாறுதல், பாஷாணங்கள் காணாமல் போய் விடுதல், தூய்மையில்லாத உறவினர்கள் கர்மாவில் கலந்து கொள்ளுதல் போன்ற சூழ்நிலைகளில் மறுபடியும் கர்மா செய்ய வேண்டி வரலாம். அல்லது மிகச்சிறிய தவறுதான் நேர்ந்துள்ளது என்றால் அதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்வது மிகவும் உதவியாக இருக்கும்.
* தானாகவோ அல்லது நல்ல பாகவதர்கள் மூலமாகவோ, ஸ்ரீமத் ராமாயணத்தை ஒன்பது நாட்கள் நவாகமாக பாராயணம் செய்யலாம்.
* ஸ்ரீமத் பாகவதம் என்னும் புராணத்தை கடஸ்தாபனம் செய்து ஸ்நானத்துடன் சப்தாகமாக ஏழு நாட்களில் பாராயணம் செய்யலாம்.
* இறந்த வீட்டில் ஒரு வருடத்துக்குள்ளாக அவரவர்களின் வேதத்தை நல்ல வித்வான்களைக்கொண்டு முழுமையாக பாராயணமாக நடத்தலாம்.
* காவேரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகளுக்கு சென்று இறந்தவர்களுக்கு நல்ல கதி ஏற்பட வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு குளித்து செய்து தானங்கள் செய்யலாம்.
* தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு கறுப்பு எள்ளோ அல்லது எள்ளு கலந்த சாதமோ அல்லது கருப்பு முழு உளுந்தோ தானமாகத் தரலாம்.
* சிராத்தம் நடைபெறும் நாளன்று சிராத்தம் முடிந்த பிறகு ஏழைகளுக்கு நிறைய ஆடை தானம், அன்ன தானம் செய்யலாம்.
* தன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும் ஏழைத்தொழிலாளிகளுக்கு உணவு, உடை ஆகியவற்றைத் தந்து உதவலாம் (தொழிலாளிகளுக்கு செய்யும் உதவியால் பித்ரு தோஷம் விலகும்).
* அமாவாசை மாதப்பிறப்பு போன்ற நாட்களில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணங்களை வில்வமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு செய்யலாம்

No comments:
Post a Comment