ஆஞ்சநேயர் உச்சரித்த ராமநாமத்திற்கு விலை மதிப்பே கிடையாது. கபீர்தாசரின் மகன்
கமலதாஸ் ஒரு பஜனைக்குச் சென்றார். அவர் ஸ்ரீராமனைப் புகழும் ஏராளமான பஜனைப்
பாடல்களைப் பாடினார். இதைக் கேட்ட வணிகர் ஒருவர், மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு
பரிசளிக்க நினைத்தார். கமலதாசிடம் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதால், அவருக்கே
தெரியாமல், அவரது மேல்துண்டில், தான் அணிந்திருந்த மோதிரத்தை கட்டி விட்டார்.
வீட்டுக்கு வந்த மகனைக் கபீர்தாசர் கடிந்து கொண்டார்.
""அப்பா! நான் அப்படிப்பட்டவனா? இது எப்படி வந்தது என்றே எனக்கு தெரியாது. ஆனாலும், யாரோ ஒருவர் அன்பளிப்பு அளிக்கும் அளவுக்கு என் பஜனை இருந்துள்ளது என்பதற்காக நீங்கள் பெருமைப்படலாம் அல்லவா!'' என்றார் கமலதாஸ்.
""மகனே! அதற்காக இல்லை! கேவலம்...ஒரு மோதிரத்துக்காக விலை மதிப்பற்ற ராமநாமத்தை விற்றுவிட்டாயோ என்று தவறாக நினைத்து விட்டேன்,'' என்றாராம் கபீர்தாசர்.
எல்லையில்லா மகிமையுள்ள ராமநாமமே, ஆஞ்சநேயருக்கு அனைவர் மனதிலும் நீங்கா இடத்தைத் தந்துள்ளது.

No comments:
Post a Comment