Saturday, February 2, 2013

தசவாயுக்களின் பணி


அபானன்:

என்னும் வாயு கீழ்நோக்கிச் செல்லும் தன்மையுடையதால் குதத்தையும், குய்யத்தையும் பற்றி நின்று, மல, ஜலங்களை கீழ்நோக்கி கழிப்பிப்பது.

வியானன்:

இது தோலிலே நின்று ஸ்பரிசங்களை மூளைக்கு அறிவிப்பது தோலில் காற்று முதல் மற்ற எந்த ஒரு ஸ்பரிச உணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது.

உதானன்:

உதிராக்கினியை எழுப்பி உண்ட அன்ன சாரத்தை 7200 நாடி நசம்புகளிலே கலப்பித்துச் சரீரத்தை வளர்ப்பது.

சமானன்:

எல்லா வாயுக்களையும் தனது கட்டுப்பாட்டில் சமமாய் விளங்க வைப்பது ஏற்ற முள்ளவைகளையும் இறங்கும் நிலைக் குரியவைகளையும் அதனதன் பணிகளுக்குச் சமனாயிருக்க உதவுவது.

நாசண்:

கொட்டாவியும் விக்கலும் கக்கலும் உண்டாக்குவது. இதன் செயல்பாடு மிகுதியால் தான் வாந்தி முதலிய விக்கல் உணர்வும் ஆகும்.

கூர்மன்:

இது கண்களிலே நின்று இமைக்க வைப்பது விரிந்து சுருங்கும் புருவ அசைவுகளுக்கும் உரியது.

கிரிகான்:

புருவ மத்தியத்தைப் பற்றி நின்று நீட்டல் முடக்கல், கோபித்தல், தும்முதல், அழுவித்தல் முதலியவைகளைச் செய்விப்பது.

தேவதத்தன்:

விழித்திருக்கும் போது ஓடுவித்தலும் உலாவுவதலும், மற்றவர்களிடம் சண்டைச்சசரவுகளை உண்டாக்குவதும், வாய்விட்டுச்சிரித்தலும் மனதுக்கு புது உற்சாகத்தை தூண்டுவதும், விசனத்தால் மனக்குழப்பத்தையும் ஆத்திரப்படவைப்பதும் ஆகும்.

தனஞ்சயன்:

பிராணன் (உயிர்) உடம்பை விட்டுப் போனாலும் தான் பிரியாமல் நின்று உடலை வீங்க வைத்தலும், விரிவித்தலும், புளிப்பித்தலும் செய்து உயிர்பிரிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு வயிறு, துபாலத்தின் வழி வெடித்து பரவெளியுடன் கலப்பது.

மனிதன் நல்லவனாய் வாழ்வதற்கும், கெட்டவனாய் வாழ்வதற்கும் சில குணங்களின் செயல்பாடும் மெய்ப்பாடுகளுந்தான் கூரணமாகின்றன. அதில் அஷ்டவிகாரங்கள் என கூறப்படும் குணங்கள்.

1. காமம் - ஆசை, 2. குரோதம் - பிணக்கு, 3. உலோபம் - பிடிபாடு, 4. மோகம் - பிரியம், 5. மதம் - கெர்வம், 6. மாற்சரியம் - உதட்டில் உறவும், உள்ளத்தில் பகையும் ஒட்டி நிற்பது. 7. இடும்பை - உதா சீனம், 8. அகங்காரம் கோயித்தல் ஆகும்.

உற்பத்தியிலேற்படும் மாற்றங்கள் சம்போக காலத்தில் சுக்கிலமும் சுரோணிதமும் ஒன்று கலந்து போகும் பாதையில் அயினன் என்னும் வாயு எதிர்பட்டால், அக்குழந்தை கடவுளாக ஆக்கபட்டதாயும் பிரம்ம தேவரை ஒத்ததாகும், அபானன் அவைகளின் நேரே செல்லுமாகில் ஞானியராகும். அபானன் மாறுதலாக எதிர்க்குமாயின் வேதங்களை அறிந்த முனிவராகும். அபானன் சமத்துவமாயின் குழந்தை பூமண்டலத்தை ஆளும் சக்கிரவர்த்தியாகும்.

ஆணின் சுக்கிலம் மிகுதியானதாயிருந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகப் பிறக்கும் சுரோணிதம் மிகுதியானால் பெண் ஆகவும் பிறக்கும் இரண்டும் சமமாக இருந்தால் அலியாகவும் சுக்கிலம் அளவுக்கு அதிகமாகி அதன்மூலம் பிறக்கும் குழந்தை நாட்டை ஆளும் பாக்கியத்தைப் பெற்றதாகும். சுக்கிலம் மிகக் குறைந்து சுரோணிதம் அதிகமானால் கரு உற்பத்தி ஆக மாட்டாது. மலட்டுத் தன்மையை உருவாக்கும்.

சம்யோக காலத்தில் மாதா, பிதா இருவருக்கும் ஐந்து நாழிகை (120 நிமிடங்கள்) வலது நாசியில் சூரியக்கலை ஓடிக் கொண்டிருக்குமாகில் அப்போது உற்பத்தியாகும் குழந்தையின் ஆயுள் வயது நூறு. இடது நாசியில் ஓடும் சுவா சந்திரகலையானால் ஐந்து நாழிகை ஆண் - பெண் இருபேருக்கும் ஓடுமானால் அப்போது பிறக்கும் குழந்தையின் ஆயுள் வயது ஐம்பது சுக்கிலமானது வாயுவோடு கலந்து பாயும் போது குறுகினால் அச்சுக்குட்டையாகும் வளையுமானால் குழந்தைமுடமாகும் நடுவில் பிளவுபடுமானால் கூனினையுடையதாகும். இவையெல்லாம் ஆராய்ந்து பார்க்கையில் இது புருடோற் பத்திக்கல்லாமல் பெண்களுக்கல்ல.

கூடுகின்ற காலத்தில் தாயின் வயிற்றில் மலம் மிகுதியாயிருந்தால் மந்தப்புத்தியையுடைதாகவும் சிறு நீர் மிகுதியாயிருந்தால் ஊமையாகவும். மலஜலம் இரண்டு சமமாய் மிகுதிபட்டிருந்தால் பிறவிக்குருடாகவும் குழந்தை பிறக்கும்.

சுக்கிலம் சுரோணிதம் ஒன்றாகுங்சாலத்தில் சூரிய கலை சுவாசம் ஓடினால் ஆண் குழந்தையும் சந்திரக்கலை சுவாசம் ஓடினால் பெண் குழந்தையும் இரண்டு சமமாக சுழிமுனையாக ஓடினால் ஆண் பெண் தன்மையிற்ற அலியாகவும் பிறக்கும்.

வாயுக்களின் சக்தி விசேஷங்களினால் சுக்கிலார்த்துவங்கள் பலவாறு சிதறி பிரித்துப்படுமானால் ஒன்றுக்கு மேற்பட்ட சிசுக்களும் உற்பத்தியாவதுண்டு பெண், ஆணுடைய சுக்கிலார்த் துவங்கள் கோளாறடைந்து வாதாதிதோ ஷங்களி விகரம் அடைந்து விட்டால் வெவ்வேறு விதமான பிராணிகளின் உருவங்களிலும் அல்லது விகாரமான ரூபேங்களிலும் இருதலை ஒரு உடல் என ஒட்டிப்பிறக்கும் நிலைமையே ஏற்படும். வாயுக்கள் ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே வித தன்மையிலிருந்தால், அப்போது தரித்தக்கருவும் கானல் நிரைப் போலாகி விடும். உள்ளிலே நிற்கும் இவ்வாயுக்களின் தன்மைகளை இவ்விதம் கரு என்று தெரிந்து கொண்டவர்களும் இல்லை, அவைகளும் உருவமே இல்லாமல் போய்விடும்.

பஞ்சபூத பிண்டோற்பித்தி

நினைத்ததற்கு எதுவாகிய கர்ப்ப சாயத்தில் உள்ள ஆகாயத்தில் பொருந்திய சுரோணிதமானது பூமி ஆகும். சுக்கிலமும் அக்னியும் வாயுவாக கூடியிருக்கும் அதிலிருக்கும் திரவமானது இந்த இரண்டையும் சமமாகக் காப்பாற்றும்.

ஜலமானது இரத்தமாக அக்னியினாலும் வாயுவினாலும் தனித்தனியாய் அவயவங்களை உண்டாக்கி வைக்கும் அதாவது அதன் பகுதியான உரோமங்களையும் சொல்லப்பட்ட மாமிசத்தையும் எலும்புகளையும் நிலைத்திருக்கக் கூடிய வைத்துவாரங்களையும் பிரித்துக்காட்டும்.

பஞ்ச பூதங்களின் வடிவு நிறம் முதலியன

1. பிருதிவி: வடிவு நாற்கோணம் நிறம் பொன் குறி, விச்சிரம் தெய்வம் பிரமன் குணம், கடினம் கூறுகள்: மயிர், எலும்பு தோல் நரம்பு தசை முதலியன

2. அப்பு: வடிவு, அர்த்த சந்திரன் நிறம் வெண்மை, குறி, தாமரை தெய்வம் விஷ்ணு குணம் நெகிழ்வு, கூறுகள், நீர், உதிரம், சுக்கிலம், மூளை மரக்கை என்பன.

3. தேயு: வடிவு - முக்கோணம் நிறம் - சிகப்பு குறி: அசுவத்திகம் தெய்வம், உருந்திரன் குணம்: சுடுகை, கூறுகள் ஆகாரம், நித்தரை, பயம் மைதுனம், சோம்பல் முதலியன.

4. வாயு: வடிவு அறுங்கோணம் நிறம் கறுப்பு குறி: அறுபுள்ளி தெய்வம், மகேசன் குணம்: திரட்டல்: கூறுகள்; ஓடல், நடத்தல் இருத்தல், கிடத்தல், நிற்றல் என்பன.

5. ஆகாயம்: வடிவு - வட்டம் நிறம் புகை குறி அமுதவிந்து, தெய்வம் - சதாசிவன் குணம் - நிரந்தரம் கூறுகள்: குரோதம், உலோடம், மோதும், மதம், மாற்சரியம் என்பன.

அவயவங்கள் தனித்தனி உண்டாக உண்டாக பிண்டமானது நிமிர்ந்து வளர்ந்து உயரும். பிண்டம் விருத்தியாக விருத்தியாக மேற்சொன்ன வாயு முதலியவைகளும் பிராணவாயு விருத்தி அடைய அதனிடத்திலுள்ள உஷ்ணமானது சிரசுக்கு ஏறும். சகல உறுப்புகளும் பக்குவமடைய பக்குவமடைய மாதமும் பத்து ஆகிவிடும். விந்துவுடன் சேர்ந்து நின்று பிராண வாயு விளக்கமாகும். அபர்ன வாயு வெளியில் நிற்கும் உதான வாயு கருவை வளர்க்கும், பிராண வாயு விந்துவுடன் உடல் கலக்கும் கருவிற்குள் வியாதி மூன்றும் கலக்கும். ஐந்தாவது நாளில் கருப்போன்ற உருவம் வளரும் பத்தாவது நாளில் திரளும் பதினைந்தாம் நாளில் முட்டை போலாகும். முதலாம் மாதத்தில் அதாவது முப்பதாவது நாளில் மூங்கில் முளை போலாகும். இரண்டாம் மாதத்தில் தலை, முதுகு இரண்டும் தோன்றும். மூன்றாவது மாதத்தில் அரை, விரல் கை, கால்கள் உண்டாகும். நான்காவது மாதத்தில் பாதம், மூக்கு உண்டாகும். ஐந்தாவது மாதத்தில் காது, நாக்கு, கண்கள் உண்டாகும். ஆறாவது மாதத்தில் நகங்கள் உண்டாகும். ஏழாவது மாதத்தில் மயிர், எலும்பு சரீரம் மலசலங்கள், தாது மூச்சு முதலியவை உண்டாகும். எட்டாவது மாதத்தில் தாயுண்டசாரம் முனையான கதிர்யோல அருவிப் பாய்ந்து தோச்சுண்டாங் கபாலத்தின் வழியே சென்று சுத்த ஜலம் பிள்ளைக்குத் தொடர்ச்சியாகும் பேச்சுண்டாம். ஒன்பதாவது மாதத்தில் அறிவு தோன்றி பிறப்பித்தோன்தனை நினைந்து தவமே செய்து கூச்சுண்டாம் கும்பிட்டே அருந்தா என்றிருக்கும். பத்தாவது மாதத்தில் குரு பார்வை ஏற்பட அபான வாயுவானது கீழ் நோக்கி வைக்கும் பாலகளும் பார்தனில் பயின்ற பின்பு ஆர்வையாய் முன்னறிவும் அசதியாசி அழுது கொண்டு ஆத்துமத்திற் கருவியிசம், மாயாசக்தி, கிரியா சக்தி மயக்கத்தில் அறிவிழிந்து நல்வினை தீவினை கோர்வையாய் வியாதியும் வந்து உற்பவித்து கொடிபடர்ந்த கரைபோல ஜெண்மமாகும்.

No comments:

Post a Comment