மதச்
சடங்குகளில் தருப்பை
அணியும் முறை
இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. [9] ரிக் வேதத்தில்(Rig
Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பைக் குறிப்பிடப்படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது
தருப்பை வடகிழக்கு மற்றும் மேற்கு வெப்பமண்டலப் பகுதிகள், வடக்கு ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா லிபியா, மொரிடானியா(Mauritania),
சோமாலியா, சூடான், மற்றும் துனிசியா) ஆகிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மித வெப்ப மண்டல மற்றும் வெப்பமண்டல நாடுகளான ஆசியா, ஆப்கானிஸ்தான், சீனா, இந்தியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், மியான்மார், நேபாளம், பாக்கிஸ்தான், சவுதி அரேபியா, தாய்லாந்து). ஆகிய இடங்களிலும் காணப்படுகிறது
தருப்பைப்புல் என்பது
(Desmostachya bipinnata) என்ற அறிவியல் பெயர் கொண்ட புல்வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும். இதில் பல வகைகள் உண்டு. தருப்பைப் பொதுவாக ஆங்கிலத்தில் ஆல்பா புல் (Halfa Grass), Big cordgrass, மற்றும் உப்புக்கோரைப்புல் (Salt
reed-grass) என அறியப்படுகிறது. [2] பண்டைய மனித உலக வரலாற்றில் அறியப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட இத்தாவரம் இந்தியாவில் "தாப்" (Daabh), தர்ப்பை (Dharba), குசம் அல்லது குசா (Kusha) முதலிய பல பெயர்களால் வழங்கப்படுகிறது
நற்காரியங்களோ அல்லது மற்ற காரியங்களோ செய்யும்போது தருப்பை அணிவது இந்துமதத்தின் ஒரு மரபாகப் பின்பற்றப்படுகிறது. தருப்பையை வலதுகை மோதிர விரலில் அணிவர் இதற்காக தருப்பையில் மோதிரம் போன்ற வளையம் செய்யப்பட்டிருக்கும். தருப்பையின் நுனிப்பகுதிதான் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தருப்பை மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தருப்பை அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது.
ஒரு புல்லைக் கொண்டு செய்யும் பவித்திரம் எனப்படும் தருப்பை இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டு செய்யப்படும் தருப்பை தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள் கொண்டு செய்யப்படும் தருப்பை அமாவாசை அன்று செய்யப்படும் நீத்தார் சடங்கு போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட தருப்பை கோயில் நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. தருப்பைப்புல்லைப் பொதுவாக பவுர்ணமிக்கு அடுத்த நாள் (பிரதமை)யன்று சேகரிக்கப்பர். அப்பொழுது மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. [14]
தமிழ் இலக்கியங்களில் தருப்பை
கம்பராமாயணம்
“ தண்டிலம் விரித்தனன்; தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து, மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து, எரி குழும், மூட்டினன்;
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன். [15]
”
பெரும்பாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படையில் கூரைகள் தருப்பையால் வேயப்பட்டிருந்தன எனக் குறிப்பிடப்படுகிறது.
“ தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற்.. [16]
”சிலப்பதிகாரம்
“ விரிகுடை தண்டே குண்டிகை காட்டம்
பிரியாத் தருப்பை பிடித்த கையினன்
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்.[17]
No comments:
Post a Comment