Thursday, April 11, 2013
சரணாகதி என்பது
.
சரணாகதி – அர்த்தம் என்ன ?
சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. “இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!’ என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. “பகவானே… நீ தான் கதி; நீ விட்ட வழி…’ என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. “நான், நான்’ என்று சொல்லி, “நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்…’ என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment