Thursday, April 4, 2013

நிவேதனம்

நிவேதனம்-இது சேஷாத நாத சாஸ்திரிகளின் விளக்கம்: கோயில்கள் பலவற்றில், சிறு பாத்திரத்தில் இருக்கும் நைவேத்தியத்தையே அனைத்து சந்நிதிகளிலும் நிவேதனம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஸ்வாமிக்கும் தனித்தனியே நிவேதனம் செய்வதுதானே சரி? பாத்திரங்களில் பகிர்ந்தளித்து பல தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் நடைமுறை பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக நிவேதனம் தயார் செய்து, அதைப் பல்வேறு பாத்திரங்களில் பகிர்ந்துவைத்து, தனித்தனியாக நிவேதனம் செய்யும்போது... முதல் நிவேதனம் ஆனதும், அதாவது முதல் பாத்திரத்தில் உள்ள நைவேத்தியம் நிவேதனம் செய்யப்பட்டதும் மற்றவையும் நிர்மால்யம் ஆகிவிடும். எனவே, மற்ற தெய்வங்களுக்குப் பகிர்ந்தளித்த நிவேதனம் தனது தூய்மையை இழந்துவிடும் என்கிறது தர்ம சாஸ்திரம். சமைத்த பொருளுக்கு மட்டும் இது பொருந்தும். தேங்காய், பழ வகைகள் தகுதி இழக்காது

No comments:

Post a Comment