Wednesday, April 3, 2013
தமிழ் வருடப் பிறப்பன்று ஏன் மருத்து நீர் வைத்து நீராடுகிறர்கள்
ஏன் மருத்து நீர் வைத்து நீராடுகிறர்கள்
தமது முன்னோர்கள் தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் ஆரோக்கியமான ஒரு காரணத்தை வைத்திருந்தார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. ஆம். அடிப்படையில் அவை ஆரோக்கியமான வாழ்வுக்கான காரணங்களேதான்.
வருடத்தில் ஒரு நாள் மருத்து நீர் வைத்து நீராடும் வழமையும் அதனைத் தயாரிக்க சேகரிக்கப்படும் பொருட்களின் அடிப்படையில் நோக்கும்போது அதுவும் மனித ஆரோக்கியத்தினைக் குறிக்கோளாகக் கொண்டதே ஆகும்.
இந்த நடைமுறைகள் நாகரீகமடைந்த இக்காலத்தில் அதிகம் கவனிக்கப்படாத ஒன்றாக இருப்பினும், தமிழ்க் கிராமங்களில் இவ்வழக்கம் இன்றும் பின்பற்றப்படும் ஒன்றாகவே இருக்கிறது.
போனவருட துன்பங்களை. தலை முழுகிறதுக்கு..சமய ரீதியாப் பார்த்தால் - துன்பங்களும் தவறுகளும் இந்தப் தூய நீரால் நீராடும் போது கழிந்து செல்லும் எனும் எண்ணம்
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் - அதில் உள்ள மூலிகைகள் உடல் நிலையை சீர்படுத்துவதற்கு....ஒரு வருடத்துக்கு ஒருக்கால் உடலை சரிபார்த்துக் கொள்ளும் ஒரு முயற்சி தான்
அதிகாலையில் எழுந்து மருத்து நீர் தேய்த்து நீராடுவது நாம் பழங்காலந் தொட்டு செய்து வரும் மரபாகும். இம்மருத்து நீரில் சேர்க்கப்படும் பொருட்கள் உடல் நலத்திற்கு ஏற்றனவாக உள்ளன.
சித்திரை மாதம் என்பது பனி முடிந்து இளவேனிற் காலம் தொடங்கும் காலமாகும். இப்பருவ மாற்ற காலத்தில் எமது உடலை மருந்துகள் மற்றும் சடங்குகள் மூலமாக நம் பெரியோர்கள் காத்தார்கள். இதனால் தான் பல மூலிகைப் பயன்பாடு கொண்ட மருத்து நீர் தயாரிக்கப்பட்டு ஆலயங்களில் வழங்கப்படுகின்றது.
ஆலயங்களுக்குச் சென்று அதை வாங்கி வந்து வீடுகளில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து அதிகாலையில் கிழக்கு நோக்கி நின்று அதை தலையில் வைப்பது பாரம்பரியமான ஒரு நடைமுறையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment