§
பிராணாயாமத்தின் நோக்கங்களும்,
நன்மைகளும்
§ • பிராணாயாமத்தின் முக்கிய நோக்கம்
உடலின் ஜீவ சக்தியை கட்டுப்படுத்துவது.
§ • தொடர்ந்து செய்து வந்தால் சுவாசம்
நிலைபெறும். சீராக இயங்கும். இந்த சக்தி உடல் மற்றும் மனதிற்கு ஒய்வைத் தரும்.
§ • சுவாச இயக்கம் மேம்படும். மற்றும்
சுவாச இயக்கத்தின் கோளாறுகள் நீங்கும்.
§ • ஜீரண சக்தி மேம்படும். ஜீரண
மண்டலத்திலுள்ள வால்வுகள் டையாஃபர்ம், அடிவயிறு தசைகள் இவையெல்லாம் சரிவர இயங்கும்.
§ • உடலின் ரத்த சுழற்சி சீராகும்
இதனால் நரம்புகள் வலுப்படும். மூளை, முதுகுத்தண்டு, நரம்புகளின் இயக்கம் இவையெல்லாம்
சீராகும்.
§ • உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும்.
இதனால் மூளை மட்டும் உடலுறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்.
§ • மனதை ஒருநிலைப்படுத்துவது சுலபமாகும்.
ஆயுள் பெருகும்.
§
• ஒட்டுமொத்தமாக உடலின் எல்லா உறுப்புகளும் சரிவர இயங்கும். இதனால் யோகா செய்பவரின்
உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
No comments:
Post a Comment