Thursday, April 11, 2013
சாமிக்கு பூவும் பழமும் படைப்பது ஏன் ?
சாமிக்கு பூவும் பழமும் படைப்பது ஏன் ?
இந்த உலகமும், உலகில் உள்ள புழு, பூச்சி முதல் மனிதன் வரை சகலஜீவராசிகள் யாவுமே. இந்த ஜீவன்கள் ஜீவிப்பதற்காகவே நீர், நெருப்பு, காற்று இவைகளையும், மரம், செடி, கொடி, புல், பூண்டு, காய், கனி, கிழங்கு போன்றவைகளையும் படைத்தான்.
மனிதர்களுக்காக இவ்வளவையும் படைத்துள்ள பகவானுக்கு, மனிதன் நன்றி தெரிவிக்க வேண்டாமா? மனதால் அவனை நினைத்து துதிக்கலாம்; பூ, பழம் முதலியவற்றை அவனுக்கு அர்ப்பணம் செய்யலாம்; அவன் நாமாவளியைச் சொல்லிச் சொல்லி நன்றி தெரிவிக்கலாம். இந்த நன்றியை அவன் எதிர்பார்க்கிறானா, இல்லையா என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். படைத்தல், அழித்தல், காத்தல் என்ற மூன்று காரியங்களையும் அவன் கடமையாகச் செய்கிறான்; நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை. ஆனாலும், நன்றி செலுத்த வேண்டியது மனிதனின் கடமை.
பகவான், ரொம்பவும் எளிமையானவன். அவனிடம் பக்தியோடு இருப்பவர்களுக்கு தன் சுய ரூபத்தைக் காண்பிக்கிறான்; பக்தரல்லாதவருக்கு உக்ரமான ரூபத்தோடு தோன்றுகிறான். பிரகலாதனுக்கு நாராயணனாகவும், அவனது தந்தையான இரணியனுக்கு நரசிம்மனாகவும் காட்சியளித்தான். பக்தனை ரட்சித்தான்; துஷ்டனை சம்காரம் செய்தான்.
எந்த சின்ன பொருளை பகவானுக்கு, அர்ப்பணம் செய்தாலும், அதை மிகப் பெரியதாக எண்ணி, ஏற்று சந்தோஷப்படுகிறான். மனமுவந்து அவனுக்கு எந்த விதத்திலாவது நன்றி செலுத்துபவர்களை அவன் தன் பக்தனாக பாவிக்கிறான். பக்தர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான்; செய்கிறான்.
சபரி என்கிற வேடுவ ஸ்த்ரீ, பகவானிடம் பக்தியோடு இருந்தாள். காட்டில் உள்ள கனிகளை சேகரித்து பகவானின் வரவுக்காக காத்திருந்தாள். அவளது ஆசிரமத்தைத் தேடிச் சென்று அவள் அளித்த பழங்களை உண்டு மகிழ்ந்து, அவளுக்கு முக்தியும் அளித்தார் ராமர்.
பாண்டவர்களுக்காக தன் பெருமைகளை மறைத்து, தூதுவனாக சென்றான்; பார்த்தனுக்கு தேரோட்டியாக இருந்தான் பார்த்தசாரதி! என்ன காரணம்? பக்திக்குக் கட்டுப்பட்டான். பக் தனுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும் என்பது அவனது கொள்கை.
இதே நாராயணன் தானே மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவும், நரசிம்மனா கவும் உருவெடுத்தான்! எதற்காக? பக்த ரட்சணம்! ஆகவே, அவன் சிறுமையாகவும் இருப்பான்; பெருமையாகவும் இருப்பான். அவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாமும் ஏதா வது ஒரு வழியில் அவனிடம் ஈடுபாடு கொண்டு விட்டால் அவன் அருள் செய்வான்!
“சாமியாவது, பூதமாவது…’ என்று சொன்னால் சாமி வராது; பூதம் தான் வரும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment