பிராணாயாமம்
மனிதனின் உடலும் மனமும் ஆரோக்கியமானதாக வைத்திருக்க நமது முன்னோர்கள் பல தியான வழிகளை நமக்கு அருளி சென்றனர்.அவற்றில் மிக முக்கியமான ஓன்று தான் இந்த பிராணாயாமம்.
பிராணாயாமம் என்றால் என்ன?
பிராணாயாமம் என்பது நாம் சுவாசிக்கும் மூச்சை அடக்கி ஆளுதல் என்று பொருள். மனிதன் சுவாசிக்கும் மூச்சானது,முதலில் சுவாசப்பையினை இயக்க செய்கிறது. சுவாசப்பை இதயத்தை இயக்குகிறது. இதயமானது நமது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக இயங்கசெய்கிறது.இந்த சீரான ரத்த ஓட்டமானது மூளைக்குச் சென்று அதனை சீராக இயங்க செய்வதன் மூலம், நமது மனதானது மூளையின் கட்டளையின் மூலம் உடல் சீர்கெடாமல் பாதுகாப்பாக வைத்திருக்கின்றது. இதுவே பிராணாயாமம் என்பதின் சுருக்கமாகும்.
பிராணாயாமம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்கள் நமக்கு அளித்துள்ள செய்முறையினை முறையாகச் செய்வதின் மூலம் அதன் முழுபலனையும் நாம் அடைய முடியும்.
பிராணாயாமத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன அவை வருமாறு;
௦01.பூரகம் – மூச்சை உள்ளே இழுத்தல்
௦02.கும்பகம் – மூச்சை உள்ளே அடக்குதல்
௦03.ரேசகம் – மூச்சை வெளியே விடுதல்.
சுவாசித்தல் என்ற இந்த தேவையான செயல் காலஅளவு மீறாத ஒழுங்கோடு செய்யப்படவேண்டும்.அதற்கு ஒரே வழி எண்ணிக்கை தான் .ஆனால் அந்த எண்ணிக்கை என்ற ஓன்று ஆழ்மனதை தொடுவதாக இல்லை.எனவே தான் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்து பிராணாயம் செய்வது சிறப்பானது.
No comments:
Post a Comment