ரோட்டில் விபத்து நடந்தால் நமக்கென்ன வந்தது என்று ரத்தத்தில் மூழ்கிக்
கிடப்பவர்களைக் கூட கண்டுகொள்ளாமல் போய் விடுகிறோம். யார் போலீசில் போய் நிக்கிறது
என்று காரணம் சொல்வோம். போலீசார் உதவி செய்பவர்களிடமும் கடுமையாக நடந்து
கொள்கிறார்கள் என்பதும் உண்மையே! ஆனால், புராண காலத்தில் சிவகணங்களில் ஒருவர்,
ராவணனுக்கு உதவப் போய், பூலோகத்தில் பிறக்க வேண்டிய இக்கட்டுக்கு
உள்ளானார்.
ராவணன் வான்வழியே தன் விமானத்தில் பவனி வரும் போது, கைலாயத்தை கடக்க வேண்டியிருந்தது. அவனைச் சுற்றிப் போகும்படி நந்தி அறிவுறுத்தினார். ராவணன் கேட்கவில்லை. கைலாய மலையையே தூக்கி எறிய முயற்சித்தான். சிவன் தன் விரலால் மலையை அழுத்த ராவணனின் கை சிக்கிக்கொண்டது. அவன் அழுது புலம்பினான்.
இதையறியாத, சிவகணமான வாகீசர் என்பவர் அவனது இக்கட்டான நிலைக்கு வருந்தி, ""நீ சிவனைப் புகழ்ந்து பாடினால் அவர் உன்னை விட்டு விடுவார்,'' என்று யோசனை சொன்னார்.
ராவணனும் பாடி விடுதலை பெற்றான். ஆனால், சிவன் வாகீசரை அழைத்து,"" தவறு செய்த ராவணனின் விடுதலைக்கு நீ காரணமாகி விட்டாய். இதற்கு பரிகாரமாக நீ பூலோகத்துக்குப் போ,'' என்று சாபமளித்தார். அந்த வாகீசர் தான் "நாவுக்கரசராக' நம் பூமியில் அவதரித்தார். சிவமே கதியென கிடந்து மீண்டும் சிவபதவி எய்தினார்.
கடவுளே கஷ்டம் தந்தாலும், பிறர்நலம் விரும்புபவர்களே சிறந்த மனிதர்கள்

No comments:
Post a Comment