திருப்பதி போனா முடி காணிக்கை, பழநி போனா முடிகாணிக்கை, இன்னும் குலதெய்வம்
கோயிலுக்கு முடி காணிக்கை... கொடுக்கிறோம். குறிப்பாக, குழந்தைக்கு முதல்
பிறந்தநாளின் போது, முடி காணிக்கை கொடுப்பது ஒரு மரபாகவே இருக்கிறது.
இதற்கு காரணம் என்ன?
ஆன்மிகம் சொல்வதை முதலில் கேளுங்கள். எல்லா மனிதர்களும் அழகாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். முடியிருந்தால் தான் முகம் அழகாய் இருக்கும். அதிலும், பெண்களுக்கு நீண்ட கூந்தலை வைத்து தான், அவர்களுடைய அழகே எடை போடப்படுகிறது. ஆனால், அழகு என்பது நிரந்தரமானதா! வயது ஐம்பதைத் தாண்டிட்டாலே தலையில் தான் முதலில் கையை வைக்கிறான் ஆண்டவன். நரைத்துப் போகிறது முடி. அழகு குறைகிறது. ஆம்...அழகு என்பது நிரந்தரமானதல்ல. அது அழியக்கூடியது என்பதை உணரவே முடி காணிக்கை கொடுக்கிறோம்.
ஆனால், நம் முன்னோர் அறிவியலிலும் ஜெகஜால கில்லாடிகள். அறிவியல் ரீதியாகவும் முடிகாணிக்கை கொடுக்கச் சொன்னார்கள். ஒரு பாத்திரத்தில் உப்பைக் கரைத்து, விரலை நனையுங்கள். பிறகு நல்ல தண்ணீரில் கழுவி விடுங்கள். இப்போது நாக்கில் தடவிப் பார்த்தாலும் உப்பு உறைக்கத்தான் செய்கிறது. ஒரு விநாடி, உப்புக்கரைசலில் நனைத்த விரலுக்கே, இந்தக் கதி என்றால், தாயின் கர்ப்பத்தில் பத்து மாதம் கிடந்த குழந்தை எதிலெல்லாம் உழன்றிருக்கும்! மலம், சிறுநீர், ரத்தம் என அவளது வயிற்றில் கிடக்கும் எல்லாவற்றிலும் தான். அப்படியானால், குழந்தைக்கு நோய் நொடி வரும். இது வராமல் தடுக்கத்தான் மொட்டை போடுகிறோம். இவ்வாறு செய்தால் அந்தக் கழிவுகள் மயிர்க்கால்கள் மூலமாக வெளியேறி விடும். மிச்சம் மீதி இருப்பது அடுத்த பிறந்தநாளின் போது அடிக்கும் மொட்டையில் வெளியேறும். இதனால் தான் குறைந்தது இரண்டு தடவையாவது குலதெய்வத்திற்கோ, இஷ்ட தெய்வத்திற்கோ மொட்டை போடுகிறார்கள்.
நிறைய பேருக்கு குலதெய்வமே தெரிவதில்லை. அவர்கள் ஏழுமலையானை குலதெய்வமாக ஏற்கிறார்கள். அதனால் தான், ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை கொடுக்க கூட்டம் அலை மோதுகிறது.

No comments:
Post a Comment