Friday, January 10, 2014

ஆகமம் என்கிற சொல்லுக்கு



சிவ ஆகமம்...

சிவத்தின் பல ரூபங்களில் சதாசிவமும் ஒன்று. ஈசானம் காரூடம், வாமம், பூத தந்திரம், பைரவம்” எங்கிற ஐந்து சித்தாந்தங்களை உள்ளடக்கிய ஐந்து முகம் கொண்ட மூர்த்தியே சதாசிவமென்பதாம்..

ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு சித்தாந்தங்களை அருளுவுது. அதைப் புரிந்து அனுசரிக்கும்போது நாமே சதாசிவமாகி அந்த சிவத்துடன் ஒன்றி விடலாம்.

எதற்கு இந்த சித்தாந்தங்கள்? இவற்றை ஏன் அனுசரிக்கவேண்டும்.? என்ற கேள்விகளுக்குள்தான் மனித வாழ்வின் ஞான விலாசமே அடங்கியுள்ளது.

இந்த சதாசிவ மூர்த்தியே காமிகம், யோகஜம் முதலிய 28 ஆகமங்களையும் அருளியவர். அதையும் 28 ரிஷிகளுக்கு அருளி அவர்கள் மூலமாக மனிதகுலம் உயர்வடைய வழியை காட்டியவர்.

ஆகமம் என்கிற சொல்லுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. “ஆ” என்பது புரிந்து கொள்ளும் ஞானத்தைக் குறிப்பது. “க” என்பது அதனால் நாம் அடையப்போகும் மோக்ஷத்தை குறிப்பது. “ம” என்பது உடம்பை வென்று உள்ளொளி பெருக்கிக் கொள்ளும் மலநாசத்தை அதாவது மானிட சரீரத்தை மனம் வெற்றி கொள்வதைக் குறிப்பது.

மொத்தத்தில் ஆகமமே மனிதப் பிறப்பினைப் புரியவைத்து மனிதன் தன்னுள் இறையைக் காண வழிகாட்டுகிறது.

நமக்கு நாம் புரிய முதலில் ஆகமம் வசப்படுதல் அவசியம். ஆகம வசப்படுதலில் விஞ்ஞானம் முதல் மெய்ஞானம் வரை சகலமும் அடக்கம்.

நீரின் குணத்தையும் ஆழத்தையும் உணர அதில் மூழ்குதலே தலை சிறந்த வழி. கரையில் அமர்ந்து கற்பனையில் எப்படி நீரின் இயல்பை அறிதல் இயலாதோ அதேபோல சிவத்தை அறிய ஆகமத்தில் இறங்கி அதில் மூழ்கி அதன்வழி நடத்தலே சிறப்பானதாகும்.
சிவ ஆகமம்... சிவத்தின் பல ரூபங்களில் சதாசிவமும் ஒன்று. ஈசானம் காரூடம், வாமம், பூத தந்திரம், பைரவம்” எங்கிற ஐந்து சித்தாந்தங்களை உள்ளடக்கிய ஐந்து முகம் கொண்ட ...மூர்த்தியே சதாசிவமென்பதாம்.. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு சித்தாந்தங்களை அருளுவுது. அதைப் புரிந்து அனுசரிக்கும்போது நாமே சதாசிவமாகி அந்த சிவத்துடன் ஒன்றி விடலாம். எதற்கு இந்த சித்தாந்தங்கள்? இவற்றை ஏன் அனுசரிக்கவேண்டும்.? என்ற கேள்விகளுக்குள்தான் மனித வாழ்வின் ஞான விலாசமே அடங்கியுள்ளது. இந்த சதாசிவ மூர்த்தியே காமிகம், யோகஜம் முதலிய 28 ஆகமங்களையும் அருளியவர். அதையும் 28 ரிஷிகளுக்கு அருளி அவர்கள் மூலமாக மனிதகுலம் உயர்வடைய வழியை காட்டியவர். ஆகமம் என்கிற சொல்லுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. “ஆ” என்பது புரிந்து கொள்ளும் ஞானத்தைக் குறிப்பது. “க” என்பது அதனால் நாம் அடையப்போகும் மோக்ஷத்தை குறிப்பது. “ம” என்பது உடம்பை வென்று உள்ளொளி பெருக்கிக் கொள்ளும் மலநாசத்தை அதாவது மானிட சரீரத்தை மனம் வெற்றி கொள்வதைக் குறிப்பது. மொத்தத்தில் ஆகமமே மனிதப் பிறப்பினைப் புரியவைத்து மனிதன் தன்னுள் இறையைக் காண வழிகாட்டுகிறது. நமக்கு நாம் புரிய முதலில் ஆகமம் வசப்படுதல் அவசியம். ஆகம வசப்படுதலில் விஞ்ஞானம் முதல் மெய்ஞானம் வரை சகலமும் அடக்கம். நீரின் குணத்தையும் ஆழத்தையும் உணர அதில் மூழ்குதலே தலை சிறந்த வழி. கரையில் அமர்ந்து கற்பனையில் எப்படி நீரின் இயல்பை அறிதல் இயலாதோ அதேபோல சிவத்தை அறிய ஆகமத்தில் இறங்கி அதில் மூழ்கி அதன்வழி நடத்தலே சிறப்பானதாகும்.

No comments:

Post a Comment