Sunday, January 19, 2014

சங்கு.


சங்கு. கடலில் இருந்து கிடைக்கும அரிய தெய்வீகப் பொருள். சங்கிற்கு பவித்ர (புனிதமான) பாத்திரம் எனப் பெயருண்டு. அதில் விடப்படும் தீர்த்தம் மிகவும் புனிதமானதாகக் கர...ுதப்படுகிறது. சங்கு பஞ்சபூதங்களாலும் மாறுபடாதது. நீரில் கிடைப்பது. நெருப்பால் உரு மாறாதது. இதிலுள்ள துவாரத்தினில் காற்றைச் செலுத்தினால் சுநாதமான ஒலியை வழங்குவது. பவழம், முத்து மற்றும் பாண லிங்கம், சாளகிராமம் ஆகியவை உயிரினங்களிலிருந்து கிடைத்து பூஜைக்குரிய பொருட்களாக விளங்குவதுபோல் சங்கும் கடலில் கிடக்கப்பெறும் பூச்சியினத்தின் மேல் ஓடு. இதுவே பூஜைப் பொருளாகக் கருதப் படுகிறது. பொதுவாக சங்குகள் இரண்டு வகைப்படும். 1. வலம்புரி சங்கு, 2. இடம்புரி சங்கு. இதை எளிதாக அடையாளம் காண இடது கையால் பிடித்துக் கொண்டு ஊதுவதற்கு வசதியாக அமைந்திருப்பது வலம்புரி சங்கு மேலும்


சத்திரபதி சிவாஜி தன் குரு ராமதாசருக்கு ஒருசமயம் நிறைய பொன்னும் மணியும் காணிக்கையாக அனுப்பி வைத்தார்.

அவற்றைப் பெற்றுக்கொண்ட ராமதாசர் பதிலுக்கு சிறிது மண், கொஞ்சம் கூழாங்கல், சிறிதளவு குதிரைச்சாணம் ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார்.

இதனைக் கண்ட சிவாஜியின் தாயாருக்குக் கோபம் வந்துவிட்டது. ""ஒரு ராஜகுமாரனுக்குப் பரிசளிக்கும் பொருள்களா இவை'' என்று கேட்டு வெகுண்டார்....

அதற்கு மாவீரர் சிவாஜி அடக்கத்துடன் சொன்னார்.

""அம்மா, இவையாவும் குருநாதரின் தீர்க்க தரிசனம் மிக்க பொருள்கள். இந்த மண், அன்னிய நாடு முழுவதையும் நான் ஜெயிப்பேன் என்பதைக் குறிக்கிறது. இந்தக் கற்கள் என்னுடைய நாட்டை வலிமை மிகுந்த கோட்டையால் காப்பேன் என்பதைக் குறிக்கிறது. இந்தக் குதிரை சாணம் எண்ணற்ற மாவீரர்கள் அடங்கிய ஒரு குதிரைப் படையை
உடனடியாக அமைக்க வேண்டும்'' என்பதைக் குறிக்கிறது







No comments:

Post a Comment