பலருக்கும் உள்ள ஒரு சந்தேகம்: ஆலயத்தில் கடவுள் விக்கிரகம் தொியக்கூடிய வகையில் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளுதல் கடவுளை அவமதிப்பதற்கு ஒப்பாகுமா? சு...வாமியைப் படம் எடுப்பதனால் அதன் சக்தி குறைந்துவிடும் என்ற கருத்துப்படவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஆதி நூலிலும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு படம் எடுக்க அனுமதிப்பதனால் ஆலய்த்தில் வழிபடுபவர்களுக்கு இடைஞ்சலாகிவிடும் என்ற காரணத்தினால் பல ஆலயங்களில் படம் எடுப்பதை தடைசெய்துள்ளார்கள். ஆனால் அவ்வாறு படம் எடுப்பதை சுவாமியை அவமதிப்பது என்று எவ்வாறு கொள்ளலாம். அப்பா அம்மாவுடன் நின்று படம் எடுத்தால் அது அவர்களை அவமதிப்பது என்று சொல்வதா? ஆகவே ஆலயங்கள் அனுமதித்தால் அவ்வாறு தெய்வங்களுடன் நின்று புகைப்படம் எடுப்பது குற்றம் அல்ல. புகைப்படக் கருவியில் இருந்து வரும் ஒளிசக்தி விக்கிரகத்தின் சக்தியை இழக்கவைக்கும் அளவுக்கு பலம் பொருந்தியதாக இருக்க முடியாது. அதனால் சுவாமியின் சக்திக்கு பாதிப்பும் இல்லை.
No comments:
Post a Comment