Sunday, January 12, 2014

சிவனும்-கந்தபுராணமும்

சிவனும்-கந்தபுராணமும்



  இந்த உலகம் இதில் வாழும் தாவரங்கள், ஜீவராசிகள், அதில் மனிதர்கள், அவர்கள் வாழத் தேவையான காற்று, நீர், நெருப்பு முதலான ஆதாரங்கள் இவற்றை வ...ிஞ்ஞானக் கண் கொண்டு பார்த்தால் வியப்பாக இருக்கும். ஒரு எல்லைக்கு மேல் ஆய்வு செய்ய இயலாமல் போய் குழப்பமாகவும் இருக்கும். செய்த வரையிலான ஆய்வுகளும் ஸ்திரமாக இருக்காது. ஒருவர் கூறிய கருத்தை அவருக்குப் பின்னால் வருபவர் மறுத்து புதிதாக ஒரு கருத்தை கூறுவார். ஆனால் உலகம் – உயிரினங்கள் பற்றிய மாறாத கருத்துகளையும் சத்தியமான உண்மைகளையும் கூறுவதாக புராணங்கள் இருப்பதை நடு நிலையோடு ஆய்ந்தால் உணரலாம். அதிலும் சிவ புராணம் உணர்த்தும் உண்மைகள் ஒப்பற்றவை. சிவனால் இறவா வரம் பெற்ற சூரபத்மனை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. சூரபத்மன் பெற்ற வரத்தின்படி அவனை கருவில் திருவுற்ற எவராலும் அழிக்க இயலாது. இந்நிலையில் சிவனே தனது ஐந்து திருமுகங்களிலிருந்தும், ஆறாவதான அஜோ முகத்தினின்றும் ஆன்மச் சுடர்களை உருவாக்கி அதை நீராகிய கங்கையில் சேர்ப்பித்து, கங்கையும் அதனை ஒரு பொய்கையில் சேர்ப்பிக்க, அந்த ஆறு சுடரும் ஆறு உருவாக மாறி கார்த்திகைப் பெண்டிரால் வளர்க்கப்பட்ட அந்த அறுவரே பின் ஆறுமுகப் பெருமானாக மாறீயதாக புராண வரலாறு கூறுகிறது. பின் இந்த ஆறுமுகனே சூரபத்மனையும் வதம் செய்தான். சிவம் எதற்கு இப்படி சுற்றி வளைக்க வேண்டும்? சிவத்தால் ஏலாதது எப்படி அதன் ஆறுமுக ரூபங்களால் மட்டும் இயலும் என்பன போன்ற கேள்விகளை உற்று நோக்கினால் உண்மை புரியும். அழித்தல் நாயகனான சிவன் இங்கே ஆக்கிப் பின் அழிப்பவனாகிறான். அவனது ஆக்கத்தில் அக்னி, வாயு, நீர் மூன்றும் முக்கியப் பங்காற்றுகின்றன. நட்சத்திர மகளிர் காலத்தால் குமாரனை ஆளாக்குகின்றனர். பஞ்ச பூதங்களோடு இதனால் காலம் என்ற ஒன்றும் இனைகிறது. சூரபத்மன் இங்கே அழிக்கப்பட வேண்டிய ஒரு சக்தி. அவன் காலத்தால் அழிக்கப்பட முடியாத வரமாகிய வல்லமை பெற்றவன். காலத்தால் அழிக்க முடியாதவனை காலத்தாலேயே அழித்தல் என்பதே கந்தபுராணம் சொல்லும் செய்தி. இதை விஞ்ஞானக் கண் கொண்டு சில ஆய்வுகளோடு பொருத்தி பார்த்தால் நுட்பமான பல உண்மைகள் தெரிய வரும்!”

No comments:

Post a Comment