சந்தியா என்றால் "சேர்க்கை' அதாவது "சந்திக்கும் நேரம்' என்று பொருள். பகலும்,
இரவும் சந்திக்கும் மாலையிலும், இரவும், பகலும் சந்திக்கும் காலையிலும் வரும் சூரிய உதயம், மறைவுக்கு
முன்வரும் 36 நிமிடமும், சூரிய உதயம், மறைவுக்குப் பின்வரும் 12நிமிடமும் இதில்
அடங்கும். இந்த சமயத்தில் வாசல் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். பூஜையறையில்
விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆண்கள் சந்தியாவந்தனம், பூஜையில் ஈடுபட
வேண்டும். லட்சுமி வீட்டுக்கு வரும் இந்த நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா
சகஸ்ரநாமம் ஜெபிப்பது சிறப்பு. இந்த சமயத்தில் சாப்பிடுவதோ, தூங்குவதோ, வீண் பேச்சு
பேசுவதோ கூடாது என்கிறது சாஸ்திரம்.
No comments:
Post a Comment