தாய், தந்தை, குரு சிறப்பு
** தருமர், பீஷ்மரிடம் “ தருமத்தில் பல இருக்கின்றனவே? எதை, எப்படி கடைபிடிப்பது? இம்மையிலும், மறுமையிலும் எப்படிப்பட்ட தர்ம பயனை அடைவேன்? “ என வினவினார்.
பீஷ்மர் சொன்னார் “ தருமா.....!! தாய், தந்தை, குருவை வழிபடுவது மிகவும் முக்கியமாகும். நன்கு வணங்கப்படும் இவர்கள் இடும் கட்டளை எப்படியிருந்தாலும் நிறைவேற்ற வேண்டும். தருமம் இல்லாத ஒன்றை அவர்கள் கட்டளையிட்டாலும் செய்ய வேண்டும். தந்தையை வழிபட்டால் இவ்வுலகையும், தாயை வழிபட்டால் மேல் உலகையும், குருவை வழிபட்டால் பிரம்ம லோகத்தையும் வென்றுவிடுவாய். எனவே தருமா அவர்களை வழிபடு. மூன்று உலகிலும் புகழ் அடவாய். எப்போதும் அம்மூவருக்கும் சேவை செய்வதே புண்ணியமாகும். அம்மூவரை போற்றாதாரை உலகம் போற்றாது. நான் எல்லா நற்காரியங்களையும் அவர்களுக்கே அர்ப்பணித்தேன். அதனால் தான் எனது புண்ணியம் நூறு மடங்காய் உயர்ந்தது.
நல்ல ஆசாரியர், வேதம் பயின்ற பத்து அந்தணர்களைவிட உயர்ந்தவர். உபாத்தியாயர் பத்து ஆசாரியரை விட உயர்ந்தவர். தந்தையோ பத்து உபாத்தியாயரை விட உயர்ந்தவர். தாயோ தந்தையை விட பல மடங்கு உயர்ந்தவள் ஆவாள். ஆகவே தாய்க்கு நிகராக யாரையும் கூற முடியாது.
எனவே உபாத்தியாயரையும், ஆசாரியரையும், தாய் தந்தையரையும் மனத்தாலும் மாறுபட நினைக்கக்கூடாது. அவர்களை சொல்லால் நிந்திக்க கூடாது. நிந்தித்தால் பாவம் பெருகும். துன்பம் கூடும் “ என்றார் பீஷ்மர்
No comments:
Post a Comment